ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரத்தன் டாடாவிடம் நான் கற்றுக்கொண்ட 4 பண்புகள் - இளம் பெண் நிர்வாகி வாணி கோலா

ரத்தன் டாடாவிடம் நான் கற்றுக்கொண்ட 4 பண்புகள் - இளம் பெண் நிர்வாகி வாணி கோலா

ரதன் டாடா

ரதன் டாடா

Kalaari Capital (கலாரி கேப்பிடல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வாணி கோலா ரத்தன் டாடாவுடன் தனது சந்திப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karnataka, India

இந்தியாவின் முன்னணி தொழிலதிபாரன ரத்தன் டாடா நேற்று தனது 85ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவரின் பிறந்நாள் ஒட்டி நாட்டின் முன்னணி தொழில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்து வந்தனர். ரத்தன் டாடாவின் அன்றாட செயல்பாடுகள், அவரின் நடவடிக்கைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் பல உண்டு என அவரை அறிந்தவர்கள் தொடர்ச்சியாக கூறி வருவதை நாம் பார்க்கலாம்.

குறிப்பாக வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் ரத்தன் டாடாவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்ற வேண்டும் என பிரபலங்கள் கூறுவார்கள். அப்படித்தான் Kalaari Capital (கலாரி கேப்பிடல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வாணி கோலா ரத்தன் டாடாவுடன் தனது சந்திப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். லிங்கட்இன் இணையதள பக்கத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள வாணி, இதன் மூலம் தான் கற்றுக்கொண்ட நான்கு முக்கிய அம்சங்களை தொகுத்து கூறியுள்ளார்.

முதலாவதாக, எந்த ஒரு சந்திப்பு என்றாலும் அதற்காக முழு தயாரிப்புடன் ரத்தன் டாடா வந்துவிடுவார் என்கிறார் வாணி கோலா. ஆழமான கேள்விகளுடன் மீட்டிங்கள் உரையாடும் ரத்தன் டாடா, பிறரின் கருத்துக்களை ஆர்வத்துடன் அமைதியான முறையில் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர். இதற்கு இணையான சிறப்பு வேறு இல்லை என்கிறார் வாணி.

இரண்டாவதாக, பிறரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் ரத்தன் டாடாவின் தன்மை முக்கியமானது என்கிறார் வாணி. இளம் தொழில்முனைவோரிடம் பேசி, அவர்களின் சிந்தனைக்கு எப்போதும் டாடா செவிகொடுப்பார். இது கற்றுக்கொள்ள வேண்டியது என வாணி தெரிவித்தார்.

மூன்றாவதாக, ரத்தன் டாடாவிடம் பெருந்தன்மையை கற்க வேண்டும். தன்னை மிக எளிமையான முறையிலேயே எப்போதும் வெளிப்படுத்தும் நபர் ரத்தன் டாடா. ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ரத்தன் டாடா.

நான்காவதாக, உலகை சிறந்த வாழுமிடமாக உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் ரத்தன் டாடா. அதற்காக தொடர்ச்சியான பங்களிப்பை ரத்தன் டாடா செய்து வருகிறார். பாசிடிவ்வான மாற்றங்களை கொண்டு வரும் அனைத்து சிந்தனைகளையும் அவர் வரவேற்பார். புதிதாக தொழில் தொடங்கும் அனைத்து தொழில் முனைவோருக்கும் ரத்தன் டாடா ஒரு ரோல் மாடல் என்கிறார் வாணி கோலா.

First published:

Tags: Karnataka, Ratan TATA