முகப்பு /செய்தி /வணிகம் / பொது வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு சேமிக்கலாம்? அவசரக்காலத்திற்கு எடுக்க முடியுமா?

பொது வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு சேமிக்கலாம்? அவசரக்காலத்திற்கு எடுக்க முடியுமா?

பொது வருங்கால வைப்பு

பொது வருங்கால வைப்பு

நீண்ட கால முதலீடாகவும், கணிசமான வட்டியுடன், பாதுகாப்பான முதலீடாகவும் வருங்கால வைப்பு நிதி கருதப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அலுவலக ஊழியர்களுக்கு மாதாந்திர சேமிப்பாக வருங்கால வைப்பு நிதியில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அதே அந்த அளவுக்கு, நிறுவனமும் தொகையை வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும். சம்பளம் இல்லாமல் வேறு தொழில் செய்பவர்களுக்கு பிபிஎஃப் என்று கூறப்படும் பொது வருங்கால வைப்பு நிதி என்ற தேர்வு இருக்கின்றது.

நீண்ட கால முதலீடாகவும், கணிசமான வட்டியுடன், பாதுகாப்பான முதலீடாகவும் வருங்கால வைப்பு நிதி கருதப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு சேமிக்கலாம் என்பதைப் பற்றி என்பதற்கான வரையறைகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி பற்றிய முக்கிய விவரங்களை விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதியின் முக்கிய அம்சங்கள்

வருங்கால வைப்பு நிதியில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு பெறலாம். அதே போல, நீங்கள் முதிர்வு தொகையாக கணிசமான தொகையைப் பெறும் போதும், உங்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது. எனவே நீண்ட கால முதலீட்டுக்கு, வரி இல்லாத முதிர்வு தொகைக்கு, இது மிகவும் பொருத்தமான தேர்வாக கருதப்படுகிறது.

பொது வருங்கால நிதியின் முக்கியமான அம்சம் என்பதை இது நீண்ட காலத்திற்கான முதலீடு என்பது தன. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் இதனுடைய லாக் இன் பீரியட் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் 15 ஆண்டுகள் வரை அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. ஒரு சில நேரங்களில் பகுதி அளவுக்கு, அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்கான தொகையை மட்டும் நீங்கள் அவசர தேவைக்கு பெற முடியும். பொது வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகையின் மீது கடன் வாங்கலாம்.

பொது வருங்கால வைப்புநிதி இந்தியாவில் வசிக்கும், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இதில் சேர முடியாது.

பொது வருங்கால வைப்பு நிதியில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம். குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 500 மற்றும் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இந்த வைப்பு நிதியில் செலுத்தலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வைப்பு நிதியில் செலுத்தப்படும் தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. இது கூட்டு வட்டியின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால் 15 ஆண்டுகள் நீங்கள் தொகையை வித்டிரா செய்யாமல் இருந்தால் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறீர்களோ, 15 ஆண்டுகள் முதிர்வடையும் காலத்தில் அது இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். தற்போது, முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி அளிக்கப்படுகிறது.

Also Read : 18000 ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.. ஷாக் கொடுத்த நிறுவனம்.. திணறும் பணியாளர்கள்!

வங்கிகள் சேமிப்பு கணக்கு மற்றும் டெபாசிட் கணக்குகளுக்கு வழங்கும் வட்டியை ஒப்பிடும்போது, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி அதிகமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இது கூட்டு வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் இந்த வைப்பு நிதியில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு என்பது 15 ஆண்டுகள் வரை நீங்கள் பணத்தை எடுக்க முடியாது என்பதுதான். எனவே குறுகிய காலத்திற்கு பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி உரிய தீர்வாக இருக்காது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றார் போல நீங்கள் பிபிஎப் கால்குலேட்டரைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் சேமிக்கலாம். உதாரணமாக நீங்கள் ஆண்டுக்கு ₹1,00,000 வைப்பு நிதியில் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் 7.1% வட்டியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு ₹27,00,000 கிடைக்கும்.

First published:

Tags: PF AMOUNT, PPF