Home /News /business /

தங்கத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. தங்கத்திற்கான வரைமுறை, வரி அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தங்கத்தில் முதலீடு செய்வோர் கவனத்திற்கு…. தங்கத்திற்கான வரைமுறை, வரி அளவைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தங்க முதலீடு

தங்க முதலீடு

குடிமக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருப்பதைத் தடை செய்ய நமது நாட்டில் 1968 ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை உருவாக்கினர். ஆனால், இந்த சட்டம் 1990 இல் ரத்து செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், இது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யும் பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்ற சட்ட வரம்புகளை அறிந்திருக்க வேண்டும்.

எந்த வகைகளில் முதலீடு செய்யலாம்?

தங்கத்தை முதலீட்டை விரும்புபவர்கள் தங்கத்தை நாணயங்கள், தங்க கட்டிகள், நகைகள் போன்ற வடிவங்களில் வாங்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகள் (தங்க ஈடிஎஃப்கள்), சாவரின் தங்கப் பத்திரங்கள் (SGBs), தங்க மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம் MFகள் போன்ற காகித வடிவங்களிலும் வாங்கலாம்.

இந்தியாவில் தங்கம் வைத்திருக்கும் விதிகள் என்ன?
குடிமக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருப்பதைத் தடை செய்ய நமது நாட்டில் 1968 ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை உருவாக்கினர். ஆனால், இந்த சட்டம் 1990 இல் ரத்து செய்யப்பட்டது.

இதன் விளைவாக, தங்கத்தின் சட்டப்பூர்வ ஆதாரம் மற்றும் ஆவணங்களை வைத்திருந்தால் அவர் வைத்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று CNBC-TV18.com உடனான பிரத்யேக உரையாடலில் டிரேட் ஸ்மார்ட்டின் தலைவர் விஜய் சிங்கானியா தெரிவித்தார்.

நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு

ரெய்டு விதிமுறைகள்: 

இருப்பினும், 11-05-1994 ஆம் தேதி வருமான வரி அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) , ரெய்டுகளில் பறிமுதல் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது . அதன்படி ரெய்டு செய்யப்படும் நபரின் பாலினம் மற்றும் அவர்களின் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை தங்க ஆபரணங்ககளை பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், திருமணமான பெண்ணுக்கு 500 கிராம் மற்றும் திருமணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் வரையிலான தங்க ஆபரணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள்.

ஆண்களுக்கு, அவர்களின் திருமண நிலை ஏதுமின்றி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆண் உறுப்பினருக்கும் 100 கிராம் என்ற குறைந்த வரம்பை CBDT வரையறுத்துள்ளது. CBDT அறிவுறுத்தலில் ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பதற்கு  எந்த வரம்பும் இல்லை, ஆனால் வரி செலுத்துவோர் சோதனையின் போது கைப்பற்றப்படும் நகைகளுக்கு மட்டும் வரையறை அளிக்கிறது.

இந்தியாவில் தங்கத்திற்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது?
தங்க முதலீடுகள் மீதான வரி விதிப்பு, வரி செலுத்துவோர் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்தது. பொருள் வடிவத்தில் செய்யப்படும் தங்கம் முதலீட்டிற்கு மற்ற மூலதனச் சொத்தைப் போலவே வரி விதிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் உதய் உமேஷ் லலித் யார் ?

தங்கம் 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக (LTCG) கருத்தில் கொள்ளப்பட்டு 20% வரி விதிக்கப்படும் (கல்வி செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தவிர). 3 ஆண்டுக்கு கீழ் உள்ள முதலீட்டிற்கு குறுகிய கால மூலதன ஆதாய சொத்துக் கணக்கில் சாதாரண வரி விதிக்கப்படும். தங்கம் பாண்ட், பத்திர முதலீட்டிற்கு அதே வரி அளவு தான்.

SGB கள் மற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படுகின்றன. பத்திரங்கள் முதிர்ச்சி அடையும் பட்சத்தில், மூலதன ஆதாயங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பத்திரங்கள் டிமேட் வடிவத்தில் பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன மற்றும் ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு மீட்டெடுக்கப்படும்.

முதிர்வுக்கு முன் விற்கப்படும் போது, ​​ஆதாயங்கள் நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு 20% வரி விதிக்கப்படும்.
Published by:Ilakkiya GP
First published:

அடுத்த செய்தி