• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • RD அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? சிறந்த வட்டி வழங்கும் வங்கிகளின் லிஸ்ட்!

RD அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? சிறந்த வட்டி வழங்கும் வங்கிகளின் லிஸ்ட்!


RD அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா?

RD அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா?

வங்கிகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும் என்பதால், எந்தெந்த வங்கிகளில் சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.,

  • Share this:
    ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்பவர்களுக்கு ஏற்றது ரெக்கரிங் டெபாசிட். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால், மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் டெபாசிட் செய்ய வேண்டும்.

    முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் உங்களுக்கு கிடைக்கும். வங்கிகளைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும் என்பதால், எந்தெந்த வங்கிகளில் சிறந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.,

    ரெக்கரிங் டெபாசிட்டுக்கு சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் :

                                                                                                                         Tenures (p.a.)




















































































































































































































































































































































































    வங்கிகள்    1 year   2 years 3 years 4 years 5 years More than 5
    Andhra Bank 5.00% 5.40% 5.50% 5.50% 5.60% 5.60%
    Allahabad Bank  5.00% 5.10% 5.15% 5.15% 5.15% 5.15%
    Axis Bank  4.40% 5.25% 5.25% 5.25% 5.75% 5.75%
    Bandhan Bank 5.50% 5.50% 5.25% 5.25% 5.00% 5.00%
    BOM  4.90% 4.90% 4.90% 4.90% 4.90% 4.90%
    BOB 4.90% 5.10% 5.25% 5.25% 5.25% 5.25%
    BOI  5.00% 5.05% 5.05% 5.05% 5.05% 5.05%
    Canara Bank 5.10% 5.10% 5.25% 5.25% 5.25% 5.25%
    Central Bank of India   4.90% 5.00% 5.00% 5.00% 5.00% 5.00%
    City Union Bank  5.00% 5.25% 5.00% 5.00% 5.00% 5.00%
    Corporation Bank  5.00% 5.40% 5.50% 5.50% 5.50% 5.60%
    Citi Bank  2.75% 3.00% NA NA NA NA
    DBS Bank  4.25% 4.55% 5.50% 5.50% 5.50% 5.50%
    Deutsche Bank 4.25% 4.50% 4.50% 4.50% 6.25% NA
    Dhanlaxmi Bank  5.15% 5.30% 5.30% 5.40% 5.40% 5.50%
    Federal Bank 5.10% 5.35% 5.35% 5.35% 5.60% 5.60%
    HDFC Bank 4.90% 5.15% 5.30% 5.30% 5.30% 5.50%
    Indian Overseas Bank 5.20% 5.25% 5.25% 5.25% 5.25% 5.25%
    ICICI Bank 3.75% 4.40% 4.40% 4.40% 4.40% 4.40%
    IDBI Bank     5.05% 5.20% 5.40% 5.40% 5.25% 4.80% to 5.25%
    Indian Bank 5.10% 5.15% 5.15% 5.15% 5.15% 5.15%
    IndusInd Bank  6.00% 6.00% 6.00% 6.00% 5.50% 5.50%
    J&K Bank 5.10% 5.20% 5.30% 5.30% 5.30% 5.30%
    Karnataka Bank 5.20% 5.50% 5.50% 5.50% 5.60% 5.60%
    Karur Vysya Bank 5.25% 5.50% 5.50% 5.50% 5.75% 5.75%
    Kotak Mahindra 4.50% 5.00% 5.10% 5.20% 5.25% 5.25%
    Laxmi Vilas Bank 5.00%  4.75% 5.50% 5.50% 5.50% 5.50%
    Oriental Bank  5.00% 5.10% 5.25% 5.25% 5.25% 5.25%
    PNB 5.00% 5.10% 5.25% 5.25% 5.25% 5.25%
    Punjab & Sind Bank 5.15% 5.15% 5.30% 5.30% 5.30% 5.30%
    Saraswat Bank 5.25% 5.25%  5.45%  5.45% 5.85% 5.85%
    South Indian Bank 5.40% 5.40% 5.50% 5.50% 5.65% 5.65%
    SBI 4.90%  5.10% 5.30%  5.30% 5.40% 5.40%
    Syndicate Bank       5.10%  5.10% 5.25% 5.25% 5.25% 5.25%
    TMB    5.50% 5.50% 5.25% 5.25% 5.25% 5.25%
    UCO Bank  4.90% 5.00% 5.00% 5.00% 5.00% 5.00%
    Union Bank 5.00% 5.40%  5.50%  5.50% 5.60% 5.60%
    United Bank  5.15% 5.15% 5.30% 5.30% 5.30% 5.30%
    Yes Bank    5.75% 6.00% 6.25% 6.25% 6.50% 6.50%
    Post office (5 years) 5.5% 5.5% 5.5% NA 6.7 % NA

    ரெக்கரிங் டெபாசிட்டில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்வோம்;

    சாதகங்கள் :

    * ஒரு மாதம் தவறினால் அபராதம் கிடையாது. தொடர்ச்சியாக 4 மாதங்களின் தவணை தவறினால் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும்

    * மாதம் மாதம் ஒரு தொகையை முதலீடு செய்வதால், நிதி ஒழுக்கம் உங்களுக்குள் வந்துவிடும்.

    * ரெக்கரிங் டெபாசிட் கணக்கு தொடங்குவது என்பது இப்போது மிகவும் எளிது.

    * ரூ.100 முதல் இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் முதலீடு செய்யலாம்.

    பாதகங்கள் :

    * குறிப்பிட்ட தொகையை நீங்கள் கட்டியே ஆக வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது

    * முதலீட்டின் இடையே நீங்கள் பணத்தை எடுத்தால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது

    ALSO READ |  கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

    முதிர்வு தொகை :

    இந்த திட்டத்தில் நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே வரும்போது, திட்டம் முதிர்வு காலத்தை எட்டியவுடன் உங்களின் தொகை, வங்கியில் வரவு வைக்கப்படும். வட்டியுடன் வரவு வைக்கப்படும் தொகைக்கு வரிவிலக்கு கிடைக்கும். மேலும், நீங்கள் அந்த தொகையை மீண்டும் முதலீடு செய்ய விரும்பினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரலாம். கூட்டு வட்டியுடன் உங்களின் முதிர்வு தொகை கிடைக்கும்.

    ரெக்கரிங் டெபாசிட்(RD) வட்டி விகிதங்களின் வகைகள் :

    * வழக்கமான சேமிப்புத் திட்டம் (Regular Savings Scheme) :

    18 வயதுக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களாக இருப்பவர்கள் தொடர் வைப்பு நிதி வங்கிக் கணக்கை தொடங்க முடியும். 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நிலையான தொகையை டெபாசிட் செய்யவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ள முடியும். இதற்கு வழங்கப்படும் வட்டியை எளிய அல்லது கூட்டு வட்டி முறையில் கணக்கிடலாம். முதிர்வு காலத்தை எட்டியவுடன் மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும். இதில் இருக்கும் சில திட்டங்கள் மீண்டும் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கின்றன. ரெக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்கி மாதம் 10 ரூபாய் கூட சேமிக்கலாம். தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 4 முதல் 6.5 விழுக்காடு வரை கிடைக்கும்.

    ALSO READ |  உயர்கல்விக்கு பணம் தேவைப்படுகிறதா? வங்கிகள் வழங்கும் சிறந்த கல்விக் கடன்கள் பற்றிய விவரங்கள்!

    * ஜூனியர் ஆர்டி திட்டங்கள் (Junior RD Schemes) :

    இது குழந்தைகளுக்கான ரெக்கரிங் டெபாசிட் திட்டம். குழந்தைகளின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அவர்களின் எதிர்காலம், கல்வி உள்ளிட்ட பிற தேவைகளுக்காக சேமிப்பதற்கு தொடர் வைப்புத்தொகை கணக்கை தொடங்கலாம். மாணவர்களாக இருப்பவர்களும் இந்த வைப்புத் தொகை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இளம் வயதிலேயே நிதியின் முக்கியத்துவத்தை அறிந்து, சேமிக்க கற்றுக்கொள்பவர்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.

    * மூத்த குடிமக்கள் RD திட்டங்கள் (Senior Citizens RD Schemes ) :

    மூத்த குடிமக்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குகளுக்கு வங்கிகள் கூடுதல் வட்டி விகிதங்களை கொடுக்கின்றன. நடைமுறையில் இருக்கும் வட்டியைவிட கூடுதலாக 0.50 விழுக்காடு வட்டி சேர்த்து கொடுக்கப்படும். அந்தவகையில் அவர்கள் சேமிக்கும் தொகைக்கு 4 முதல் 7.25 விழுக்காடு வரை வட்டி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முதுமை காலத்தில் அவர்களுக்கு இந்த சேமிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.

    ALSO READ |  போஸ்ட் ஆபிஸில் RD செலுத்த தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டுமா? தாமதக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்! 

    * சிறப்பு RD திட்டங்கள் (Special RD Schemes) :

    மக்களின் தேவை மற்றும் இலக்குகளுக்காக உருவாக்கப்பட்டவை இந்த சிறப்புத் திட்டங்கள். இவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு பொதுவாக கூடுதல் வட்டி கிடைக்கும். வங்கிகளுக்கு வங்கி சிறப்புத் திட்டங்கள் மாறும். காப்பீடு உண்டு. சில திட்டங்களில் பகுதியளவு பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். மொத்த தொகைகளுக்கு கூடுதலான சில சிறப்பு வட்டிகளும் கொடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: