Home /News /business /

Budget 2019: புதிய வரி அறிவிப்புகளில் தனிநபர்களுக்கு கிடைத்தது என்ன?

Budget 2019: புதிய வரி அறிவிப்புகளில் தனிநபர்களுக்கு கிடைத்தது என்ன?

வருமான வரி

வருமான வரி

வருமான வரித் தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயமில்லை. எனவே இனி ஆதார் கார்டு இருந்தாலே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருமான வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், பிற வரி அறிவிப்புகள் என்னவென்று இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

    பட்ஜெட் 2019-ல் தனிநபர் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கோடி கணக்கில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கபட்டுள்ளது.

    கூடுதல் வரி:


    ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரியும், 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு 7 சதவீதம் வரை கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

    வரிச் சலுகைகள்:


    2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை பட்ஜெட் விலையில் அதாவது 45 லட்சம் ரூபாய்க்குள் வீட்டுக் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1.50 லட்சம் ரூபாய் வரி சலுகை 3.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மின்சார வாகனங்கள்:


    கடன் வாங்கி மின்சார வாகனங்கள் வாங்கும் போது 1.5 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகன விற்பனையை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க உதவும்.

    ஆதார் கார்டு:


    வருமான வரித் தாக்கல் செய்ய பான் கார்டு கட்டாயமில்லை. எனவே இனி ஆதார் கார்டு இருந்தாலே வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Budget 2019, Income tax, Union Budget 2019

    அடுத்த செய்தி