Home /News /business /

தொடர்பில்லா கார்டுகளை பயன்படுத்துவது நல்லதா? முழு விவரம்

தொடர்பில்லா கார்டுகளை பயன்படுத்துவது நல்லதா? முழு விவரம்

தொடர்பில்லா பரிவர்த்தனை அட்டை

தொடர்பில்லா பரிவர்த்தனை அட்டை

Contactless payment: கடைகளில் கார்டு கொடுத்து பின் போட்டு பரிவர்த்தனை சேயும் காலத்தை 10 மடங்கு குறைக்கும் தொழில்நுட்பம்

இப்போது வரும் காலங்களில் பண பரிவர்த்தனை என்பது வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணமாக கொடுப்பதை விட டிஜிட்டல் முறையில் தான் அதிக பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஒரு பென்சில் வாங்கினால் கூட க்யுஆர் கோடைத் தேடுகின்றனர்.

பண அட்டைகளும் புதுமை பெற்றே வருகின்றன. சமீப காலங்களில் நீங்கள் ஒரு விளம்பரத்தை அதிகம் கவனித்திருப்பீர்கள். கார்டை விற்பனைப் புள்ளி அமைப்பு (point of sale ) இயந்திரத்திற்கு அருகில் கொண்டு போனால் போதும். பணம் செலுத்தப்படும் என்று.
இப்படி இயந்திரத்தைத் தொடாமல் கட்டணம் செலுத்தும் முறைக்கு contactless payment - தொடர்பு இல்லாத கட்டணம் என்று பெயர்.

எப்படி வேலை செய்கிறது
"தொடர்பு இல்லாத கட்டணம்" என்பது, கிரெடிட், டெபிட் அல்லது கிஃப்ட் அட்டைகள் கொண்டு, ரேடியோ அலைவரிசை அடையாளம் காணும் (RFID) தொழில்நுட்பம் மற்றும் நியர்-ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்வது.

தற்போது வங்கிகள் விநியோகிக்கும் புதிய பண அட்டைகளை நன்றாக கவனித்துப் பாருங்கள். சிப் வைத்த அட்டைகளில் வைஃபை குறியீடும் போடப்பட்டிருக்கும். அப்படி இருந்தால் அது தொடர்பில்லா பரிவர்த்தனைக்கு ஏற்றது என்று பொருள். அந்த அட்டையில் சிப்போடு ஒரு ரேடியோ ஆன்டெனாவும் பொருத்தப்பட்டிருக்கும்.கடைகளில் வைத்திருக்கும் பணம் செலுத்தும் இயந்திரங்களில் வைஃபை தொழில்நுட்பம் ஏற்கனவே பொதிந்திருக்கும். இப்போது நம் கையில் உள்ள அட்டையை அந்த இயந்திரத்தின் மேல் 2 சென்டிமீட்டர் தொலைவில் வைத்தால் ரேடியோ அலைவரிசை மூலம் பண பரிவர்த்தனை நடக்கும். அதற்காக அட்டையை வேகமாக எடுத்து விடக்கூடாது. 2 நொடிகளாவது இயந்திரத்தின் அருகில் இருக்க வேண்டும். இயந்திரத்தில் பச்சை விளக்கு எறிந்ததும் பரிவர்த்தனை வெற்றி பெற்றது என்று பொருள். அதன் பின்னர் அட்டையை எடுத்துக்கொள்ளலாம்.

ஒற்றை கோட் :
இயந்திரத்தின் முன் அட்டையை காட்டியதும் அந்த வங்கி கணக்கிற்கு கடைக்காரர் பெயர் , வங்கி, பரிவர்த்தனை தொகை எல்லாம் போகும்.
அங்கே ஒரு ஒற்றைப் பயன்பாட்டு கோட் உருவாகி அந்த பரிவர்த்தனையை அங்கீகரிக்கும். அதன் பின் கடைக்காரர் கணக்கிற்கு பணம் வந்து சேரும். இவை எல்லாம் நொடிகளில் நடக்கும்.

ஃபிரண்ட்-எண்ட் டெவலப்பர் ஆக விருப்பமா? தேவைப்படும் திறன்கள், வேலை வாய்ப்புகள் பற்றிய முழு விவரங்கள்

விவரம் குறைந்த பரிவர்த்தனை:
அட்டையை தேய்க்கும் போது அந்த அட்டைதாரரின் பெயர், விலாசம், கணக்கு எண் எல்லாமே பரிவர்த்தனை விவர பட்டியலில் சேரும். சைபர் திருடர்கள் இதைக் கைப்பற்றி அந்த கணக்கிலிருந்து பணம் திருடுவர். ஆனால் இந்த தொடர்பில்லா அட்டையை பயன்படுத்தும் போது வங்கியின் பெயர் மட்டும் பதியுமாறு உருவாக்கி வருகின்றனர்.

பயன்
காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் என்பது பணம் செலுத்தும் இடத்தில் கார்டை தேய்ப்பதற்கு அல்லது செருகுவதற்கு மாற்றாகும். வணிகர்களுக்கு இது வேகமாக பணம் பெறும் முறையாக உள்ளது. மக்களும் வரிசையில் நின்று எண் போட்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றனர்.

திருட்டு:
ஒருவர் உங்கள் கார்டை திருடிவிட்டால் சாதாரண கார்டை போல் அதை தடுக்க அதாவது பிளாக் செய்ய முடியாது. ஆனால் உடனடியாக வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். திருடியவர் அந்த அட்டையை வைத்து பொருள் வாங்க முடியும். அதை வங்கியால் மட்டுமே தடுக்க முடியும். அப்படி மீறி பரிவர்த்தனை நடந்தால் இழந்த பணத்திற்கு வங்கியும், கார்டு விநியோகித்தவர்களும் தான் பொறுப்பு. இழந்த பணத்தை அதே வங்கி கணக்கிற்கு சம்பந்தப்பட்ட வங்கி செலுத்தும்.

உச்சவரம்பு:
இந்த வங்கியின் ரிஸ்க் நிலையால் தொடர்பில்லை பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச தொகையை உச்ச வரம்பாக வைத்துள்ளனர். 2000 ரூபாய் வரை பின் இல்லாமல் அட்டையை பயன்படுத்தலாம். அதற்கு மேல் பின் உள்ளிட்டு பணம் செலுத்தலாம்.

வேறு சில வழிகள்:உங்கள் கூகிள்பே, ஆப்பிள்பே முதலிய செயலிகளில் இந்த காண்டாக்ட்லெஸ் அட்டையை முதன்மையான கணக்காக வைத்திருந்தால் அதிலும் பின் போடத் தேவையில்லை. வைஃபை மட்டும் பயன்படுத்தி 2000 வரை பணம் செலுத்தலாம். ஃபோன், ஸ்மார்ட் வாட்ச் என்று எதன் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bill payment issue, Credit Card, Payment App

அடுத்த செய்தி