• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பின் பின்னணி என்ன?- கச்சா விலையா? மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பா?

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பின் பின்னணி என்ன?- கச்சா விலையா? மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பா?

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

டீசல் மீதான வரி லிட்டருக்கு, ரூ.46.24, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.57.29. இதனையடுத்து எதிர்க்கட்சிகள், ‘பாஜக அரசு மக்கள் நல அரசு அல்ல, தன் சொந்த மக்களுக்கு எதிராகவே பொருளாதாரப் போரைத் தொடுக்கும் அரசு’ என்று சாடி வருகின்றனர்.

  • Share this:
பெட்ரோல் விலை ராஜஸ்தானில் லிட்டருக்கு ரூ.100-ஐக் கடந்து விட்டது, டீசல் விலையையும் ரூ.100 பக்கம் கொண்டு வந்து விடுவதுதான் இலக்கு போல் தெரிகிறது என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

பெட்ரோல் டீசல் விலை ஏறினால் என்னவாகும் என்றால் அத்தியாவசியப் பொருட்கள் முதல் பிற பொருட்கள் வரை விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால் முழுபழியும் உலகக் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அக்டோபர் 2020-ல் சராசரியாக பேரல் ஒன்றிற்கு 40.7 டாலர்களாக இருந்தது. பிப்ரவரி 16, 2021-ல் பேரல் ஒன்றுக்கு 62.64 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது 54% உயர்வாகும்.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தப் போதும் இப்போதைய பெட்ரோல் டீசல் விலையை விட குறைவாகவே முன்பு இருந்தது. ஆனால் இப்போதைய பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பு மட்டுமே காரணம் என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

மத்திய அரசின் தீர்வை தவிர மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றி வருகின்றனர்.

இந்தியன் ஆயில் இணையதளத்தில் கிடைத்த தகவல்களின் படி செண்ட்ரல் எக்சைஸ் தீர்வையால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.32.9-ம், மதிப்புக்கூட்டு மாநில வரியினால் லிட்டருக்கு ரூ.20.61-ம் டெல்லியில் பெட்ரோல் விலை அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளன.

பெட்ரோல் விலை லிட்டருக்கான அடிப்படை விலை மற்றும் டீலர் கமிஷன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டர் ரூ.35.78 தான்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் விளைந்த லாக் டவுன் காரணமாக உலகக் கச்சா எண்ணெய் தேவை குறைந்து விலைகள் கண்டபடி குறைந்தன. பெரிய எண்ணெய் நிறுவனங்கள் சப்ளையை மட்டுப்படுத்தினர், விலை நேரானது.

இப்போதைய கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கெனவே கணிக்கப்பட்டதை விட அதிகமாகவே உள்ளது.

இந்தியாவின் குரூட் ஆயில் பேஸ்கட்டில் கச்சா விலை பேரலுக்கு 62.24 டாலர்களாக உள்ளது. டெல்லியில் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.31.82 ஆகும். பிப்ரவரி 17ம் தேதி டாலர்-ரூபாய் செலாவணி டாலர் ஒன்றுக்கு 72.84 ரூபாயாக உள்ளது. இந்தக் கணக்கின் படி பார்த்தால் பேரல் விலை இந்திய ரூபாய்க்கு ரூ.4,533.6 ஆக உள்ளது. ஒரு பேரல் என்பது 159 லிட்டர்கள் என்றால் ஒரு லிட்டர் கச்சா விலை இந்திய ரூபாயின் படி லிட்டருக்கு ரூ.28.5 ஆக இருக்கும்.

டாலர்-இந்திய ரூபாய் பரிமாற்ற மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் அடிப்படை விலை விகிதத்தின் படி கச்சா விலையை விட 1.12 மடங்கு பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும். கச்சா விலை பேரல் ஒன்றுக்கு 64 டாலர்களாக இருந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 ஆக இருக்கும். கச்சா விலை பேரல் ஒன்றுக்கு 74 டாலர்களானால் பெட்ரோல் விலை இந்தியாவில் ரூ.95ஆக இருக்கும். பேரல் ஒன்றுக்கு கச்சா விலை 83 டாலர்களாக அதிகரித்தால் மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐக் கடக்கும்.

மத்திய, மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் நிச்சயம் சூழ்நிலை இன்னும் கொஞ்சம் தணிவாக இருக்கும். பெட்ரோல் டீசல் மீதான வரியில் மத்திய அரசு நிறைய வருவாய் ஈட்டுகிறது. மாநில அரசுகளின் பிற வருவாய் வாசல்களும் அடைக்கப்பட்டதால் இவர்கள் மதிப்புக் கூட்டு வரியை குறைப்பது என்பதை எதிர்ப்பார்ப்பதை விட மத்திய அரசு எக்சைஸ் தீர்வையைக் குறைக்க முடியும் அப்படிக் குறைத்தால் பெட்ரோல், டீசல் வானளாவிய எகிறு விலையை சற்றே தணிக்கு மக்கள் சுமையைக் குறைக்க முடியும்.

பிப்.16ம் தேதி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்திப் சுர்ஜேவாலா கூறும்போது, கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தின் மூலம் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

டீசலின் அடிப்படை விலை லிட்டர் ரூ.33.46, பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.31.82. ஆனால் சாமானிய மக்கள் கொடுக்கும் விலை பெட்ரோலுக்கு ரூ.89.29, டீசலுக்கு ரூ.79.35. அடிப்படை விலைக்கும் மக்களிடமிருந்து வசூலிக்கும் விலைக்கும் இவ்வளவு பெரிய இடைவெளிக்குக் காரணம் கச்சா விலை உயர்வல்ல, மத்திய அரசின் வரி விதிப்புதான் என்றார் சுர்ஜே வாலா.

டீசல் மீதான வரி லிட்டருக்கு, ரூ.46.24, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.57.29. இதனையடுத்து எதிர்க்கட்சிகள், ‘பாஜக அரசு மக்கள் நல அரசு அல்ல, தன் சொந்த மக்களுக்கு எதிராகவே பொருளாதாரப் போரைத் தொடுக்கும் அரசு’ என்று சாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: