பணமில்லா கிராமப்புற பொருளாதாரம்... இந்தியாவைத் தாக்கும் உணவுப் பஞ்சம்!

’கட்டாயமாய் திணிக்கப்பட்ட பணம் இல்லா பொருளாதார சூழலால் உள்நாட்டு வர்த்தகம் உட்பட ஏற்றுமதி, இறக்குமதிகள் திட்டங்களும் குளறுபடிகளைச் சந்தித்தன’.

பணமில்லா கிராமப்புற பொருளாதாரம்... இந்தியாவைத் தாக்கும் உணவுப் பஞ்சம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: January 15, 2020, 2:07 PM IST
  • Share this:
பணமில்லா கிராமப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு இந்தியாவில் கடுமையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் இதனது தாக்கம் இந்தாண்டு மிகைப்படியாகவே உள்ளது. கடந்த 2018 டிசம்பரில் இருந்ததைவிட காய்கறிகளுக்கான பஞ்சம் 60.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய கிராமப் பகுதிகளில் பணம் இல்லா பொருளாதார நிலை நிலவுவதாலும் இந்தியாவில் உணவுப் பஞ்சம் அதிகரித்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினரும் ஜேஎன்யூ பொருளாதார பேராசிரியருமான அபிஜித் சென் கூறுகையில், “பெரும்பான்மையான பிரச்னைகள் பணமிதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுதான். கட்டாயமாய் திணிக்கப்பட்ட பணம் இல்லா பொருளாதார சூழலால் உள்நாட்டு வர்த்தகம் உட்பட ஏற்றுமதி, இறக்குமதிகள் திட்டங்களும் குளறுபடிகளைச் சந்தித்தன.


இதன் காரணமாகவே இந்தியாவில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெங்காய விலை வரலாறு காணாத விலை உச்சத்துக்கு சென்றதும் இதன் தாக்கமே” என்றார்.

மேலும் பார்க்க: பிரசவத்துக்காக கர்ப்பிணித் தாயை தூக்கிச்சென்ற 100 ராணுவ வீரர்கள்... பிரதமர் மோடி வாழ்த்து!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்