வீடுகள் விற்பனை சரிவு... தமிழக நகருக்கு சரிவில் முதலிடம்..!

பொருளாதார மந்தநிலையின் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீடுகள் விற்பனை சரிவு... தமிழக நகருக்கு சரிவில் முதலிடம்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 4, 2019, 9:17 PM IST
  • Share this:
இந்தியாவில் ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் வீடுகள் விற்பனை கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளது.

வீடுகள் விற்பனை சராசரியாக 9.5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. நாட்டின் முக்கிய 9 நகரங்களில் பொருளாதார மந்தநிலையால் வீடுகள் விற்பனை வீழ்ந்துள்ளது. இந்தியாவின் முன்னனி JLL இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் கூட வணிக ரீதியாக விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த 2018 ஜூலை - அக்டோபர் காலகட்டத்தில் முக்கிய 9 நகரங்களில் விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 58,461. ஆனால், 2019 -ம் ஆண்டு இதே காலகட்டத்தில் வீடுகள் விற்பனை 9.5 சதவிகிதம் விழ்ச்சி அடைந்துள்ளது. அதிகப்படியான வீழ்ச்சியைச் சந்தித்த நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.


சென்னையில் மட்டும் வீடுகள் விற்பனை 25 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2018 ஜூலை- செப்டம்பர் காலகட்டத்தில் 4,080 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,060 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. பொருளாதார மந்தநிலையின் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: இந்திய ‘தாமஸ் குக்’ நிறுவனம் ஒருநாளும் சீன நிறுவனத்துக்குக் கீழ் வராது..!

கண்ணாடி அணிவதற்கும் கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கும் உள்ள வித்தியாசம்?
First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading