Home /News /business /

45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்

45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்

ஹோம் லோன்

ஹோம் லோன்

Housing Loan: 45 வயதில் நீங்கள் வீடு வாங்க நினைத்தால் அங்குதான் புதிய சிக்கல் நீடிக்கும். ஏனென்றால் குறைந்தபட்ச தவணைக் காலம் என்பது 15 ஆண்டுகள் ஆகும்.

    சொந்த வீடு வேண்டும் என்பதே வாழ்க்கையில் எல்லோருக்குமான கனவு ஆகும். அதில், பெருநகரங்களில் முழுவதுமாக சொந்த பணத்தை போட்டு வீடு வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆகவே, நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடன் பெற்று புதிய வீடு வாங்குவதற்கு முயற்சி செய்வது வழக்கம். எப்படி பார்த்தாலும் சுமார் 15, 20 அல்லது 30 ஆண்டுகள் வரையில் தவணை செலுத்தக் கூடியதாக வீட்டுக் கடன் என்பது நீண்டகால நிதிச்செலவு திட்டம் ஆகும்.

    நல்ல சம்பளம் பெறக் கூடிய இளைய பணியாளர்கள், சிறு வயதிலேயே நீண்ட கால தவணை முறையில் வீட்டுக் கடன் எடுத்து விடுவார்கள். இதனால், அவர்களுக்கான இஎம்ஐ என்பது குறைவாக இருக்கும். ஆனால், எல்லோருக்கும் இளம் வயதில் வீடு வாங்கும் வாய்ப்பு கிடைத்து விடாது. சில ஓய்வுகால திட்டமாக வீடு வாங்குவதற்கு விரும்புவார்கள்.

    இதையும் படிங்க.. திருமணமானவர்கள் கவனத்திற்கு..புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க இதையெல்லாம் செய்ய வேண்டும்!

    ஆனால், 45 வயதில் நீங்கள் வீடு வாங்க நினைத்தால் அங்குதான் புதிய சிக்கல் நீடிக்கும். ஏனென்றால் குறைந்தபட்ச தவணைக் காலம் என்பது 15 ஆண்டுகள் ஆகும். இதனால், மாதத்தவணை மிக அதிகமாக இருக்கும். இப்போது உங்களுக்கு 45 வயது இருந்து, உங்களுக்கான முதலாவது அல்லது இரண்டாவது வீடு வாங்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கான ஆலோசனைகள் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ளன.

    ஒப்பீடு செய்து, கடன் வழங்குபவரை சரியாக தேர்வு செய்யுங்கள்

    நிதி சார்ந்த சேவைகளில் கடன் வழங்கும் லெண்டர்ஸ் ஏராளமாக உண்டு. இறுதியாக ஒருவரை தேர்வு செய்யும் முன்பாக சரியாக எல்லோரையும் பரிசீலனை செய்வது சற்று சவாலான காரியம். பல்வேறு அம்சங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு 0.5 சதவீத வேறுபாடு கூட உங்களுக்கு பெரிய தொகையாக அதிகரித்துவிடும்.

    இதையும் படிங்க.. பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடும் எண்ணம் இருந்தால் SBI வங்கி சரியான தேர்வு!

    உதாரணத்திற்கு, 50 லட்சம் கடனுக்கு ஆண்டுதோறும் 7 சதவீத வட்டி என்றால் உங்களுக்கான தவணை தொகை ரூ.44,941 ஆகும். அதுவே 7.5 சதவீத வட்டி என்றால் உங்கள் தவணை தொகை ரூ.46,351 ஆக அதிகரித்துவிடும்.

    ஜாயிண்ட் வீட்டுக் கடன் திட்டம் மூலம் உங்கள் தகுதியை அதிகரிக்கலாம்

    உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது பணிபுரியும் உங்கள் பிள்ளையுடன் இணைந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான தகுதி அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், வயதான காலத்தில் மிக அதிகமான தவணை தொகையுடன் கடன் பெறுவது உங்களுக்கு சிரமமாக இருக்கும். ஆகவே, இன்னொருவருடன் இணைந்து வீட்டுக் கடன் பெற்றால், உங்களுக்கான தவணை தொகை சற்று குறையும்.

    நீண்ட கால கடன் பெறவும்

    45 வயதில் உங்களுக்கான தவணைக் காலம் 15 ஆண்டுகள் மட்டுமே என்றாலும், உங்களிடம் இருக்கும் நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் நல்ல நிறுவனத்தின் வேலை என்ற அடையாளம் போன்ற தகுதிகளை பயன்படுத்தி, ஓய்வுபெற்ற பிறகும் தவணை செலுத்தும் வகையில் நீண்டகால கடனை பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Home Loan

    அடுத்த செய்தி