Home /News /business /

சொந்த வீடு கட்ட லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

சொந்த வீடு கட்ட லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

ஹவுஸிங் லோன்

ஹவுஸிங் லோன்

வீட்டு கடன் வாங்க உள்ளோரை மகிழ்ச்சியில் திழைக்க வைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

  கொரோனா காலக்கட்டத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்து வந்த மக்கள் கடந்த சில மாதங்களாக மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எவ்வித வரிச்சலுகையும் கிடைக்காவிட்டாலும், தனிநபர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வீட்டு கடன் வழங்குவதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  வீட்டுக் கடன்களை மலிவாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ரிசர்வ் வங்கி (RBI) கடந்த வெள்ளிக்கிழமையன்று, வீட்டுக் கடன் சீர்திருத்தத்தை மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

  இந்த விதி குறித்து எஸ் ரஹேஜா ரியாலிட்டியின் இயக்குனர் ராம் ரஹேஜா கருத்து தெரிவிக்கையில், "ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, தற்போதைய உலகளாவிய அரசியல் நெருக்கடி மற்றும் தொடர்ந்து வரும் தொற்றுநோய் ஒரு பிரச்னையாக உள்ளது. உறுதியான சொத்து மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பதால், மக்கள் தொடர்ந்து மனைகளில் முதலீடு செய்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  நேட்டோவில் சேர திட்டம்.. உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன், ஃபின்லாந்து நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை

  ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,“2020 அக்டோபரில் தனிநபர் வீட்டுக் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் மதிப்பீடு செய்யப்பட்டு, மார்ச் 31, 2022 வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து புதிய வீட்டுக் கடன்களுக்கான மதிப்பு (எல்டிவி) விகிதங்களுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வீட்டுவசதித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த முறையை மார்ச் 31, 2023 வரை நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்”

  வீடமைப்புத் துறையின் முக்கியத்துவமும், பொருளாதாரத்திற்கு அதனால் கிடைக்கும் நன்மைகளையும் கருதி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியிருப்பு ரியல் எஸ்டேட் மேலும் வளர்ச்சி அடையும் என்றும், ஒட்டுமொத்த நிச்சயமற்ற தன்மை, விசாலமான வாழ்க்கை இடங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதற்கு மக்களை வழிநடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடனுக்கான மதிப்பு விதிகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது வீடு வாங்குவோரின் தேவையை அதிகரிக்க உதவும்.

  சொத்து வரி உயர்வு – கம்பம் நகராட்சி மன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் காரசார விவாதம்…

  லோன்-டு-வேல்யூ (எல்டிவி) விகிதம் என்பது வாடிக்கையாளர்கள் கடன் வாங்கும் கடனின் அளவை வாடிக்கையாளர் வாங்கும் சொத்தின் மதிப்புடன் ஒப்பிடும் நிதி விகிதமாகும். வழக்கமாக, கடன் வழங்குபவர்கள் கடன் எவ்வளவு ஆபத்தானது மற்றும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா அல்லது மறுக்கிறார்களா என்பதை தீர்மானிக்க லோன் -டு - வேல்யூவை பயன்படுத்துகின்றனர்.

  ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை:

  2022-23 நிதியாண்டிற்கான நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) முதல் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடன் விகிதங்கள் - ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என முடிவு எடுத்துள்ளது. ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்பது, வீடு வாங்க வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மற்றும் பெறுவருக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. எனவே குறைவான வட்டி விகிதத்தில் எளிதான மாதாந்திர தவணையைச் செலுத்தும் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bank Loan, Home Loan, RBI

  அடுத்த செய்தி