• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாதாந்திர சந்தா கட்டணத்தை உயர்த்திய ஹாட்ஸ்டார்!

மாதாந்திர சந்தா கட்டணத்தை உயர்த்திய ஹாட்ஸ்டார்!

ஹாட்ஸ்டார்

ஹாட்ஸ்டார்

சென்ற மாதம் டிஸ்னி 21st செஞ்சூரி ஃபாக்ஸ் நிறுவனம் ஹாட்ஸ்டாரை கைப்பற்றியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆன்லைன் மற்றும் ஆப் வீடியோ சேவை நிறுவனமான ஹாட்ஸ்டார் மாதாந்திர சந்தா கட்டணத்தை 199 ரூபாயிலிருந்து 299 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

    ஹாட்ஸ்டார் மாந்தாந்திர கட்டணத்தை உயர்த்தியிருந்தாலும் ஆண்டு மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தவில்லை. புதிய கட்டணம் ஹாட்ஸ்டார் தளத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ஹாட்ஸ்டார் மாந்திரா சந்தா ரூ.299 மற்றும் ஆண்டு கட்டணமாக 999 ரூபாய் செலுத்துபவர்கள் ஹாட்ஸ்டார் சேவை மட்டுமல்லாமல், விரைவில் தொடங்க உள்ள டிஸ்னி பிளஸ் சேவையில் வழங்கப்படும் படங்கள், அமெரிக்க ஷோக்கள் போன்றவற்றயும் பார்த்து மகிழலாம்.

    அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை 365 ரூபாய் செலுத்தி பெறும்போது, ஓர் ஆண்டுக்கு அமெரிக்க ஷோ, ஹாலிவுட் படங்களைத் தவிர்த்து பிற மொழி சேவைகளை ஓர் ஆண்டுக்குப் பெற முடியும்.

    சென்ற மாதம் டிஸ்னியின் 21st செஞ்சூரி ஃபாக்ஸ் நிறுவனம் ஹாட்ஸ்டாரை கைப்பற்றியது. இதனையடுத்து ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ உரிமையாளராகியுள்ளது டிஸ்னி.

    டிஸ்னி பிளஸ் சேவை இந்தியாவிற்கு வரும்போது, தமிழ் உட்பட பிராந்திரய மொழிகளிளும் படங்களைப் பார்க்க முடியும்.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: