Home /News /business /

கச்சா எண்ணெய் விலை உயர்வு.. சென்சூரி போடும் பெட்ரோல் விலை - விலையை குறைக்க உற்பத்தி நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்

கச்சா எண்ணெய் விலை உயர்வு.. சென்சூரி போடும் பெட்ரோல் விலை - விலையை குறைக்க உற்பத்தி நாடுகளுக்கு இந்தியா வேண்டுகோள்

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

விலையை நியாயமானதாக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாட்டு நண்பர்களை பல தடவை வற்புறுத்தி விட்டேன்

    கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகவும் சவாலாக இருக்கிறது என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்  தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சதமடிக்காத குறையை பெட்ரோ விலை தீர்த்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் சென்சூரி போட்டபிறகு பேட்டை உயர்த்திக்காட்டுவது போல் பெட்ரோல் பங்க்-களில் பெட்ரோல் போடும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை உயர்த்தி காட்டுகிறார்கள். சாமாணியர்கள் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் பொதுபோக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    Also Read: இங்க யாருக்கும் சம்பளம் தரல.. லைவில் போட்டுடைத்த செய்தி வாசிப்பாளர் - ஷாக்கான நேயர்கள்

    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் வளர்ச்சி பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகவும் சவாலாக இருக்கிறது. அதன் விலையை நியாயமானதாக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நாட்டு நண்பர்களை பல தடவை வற்புறுத்தி விட்டேன். ‘ஓபெக்’ (எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு) கூட்டம், ஜூலை 1-ந்தேதி நடக்கிறது. அதில், விலை சற்று குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மற்றும் ஓடிசா சில பகுதிகளில் டீசல் லிட்டருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Oil Minister Dharmendra Pradhan, Petrol, Petrol Diesel Price, Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி