நீங்கள் ஒரு வீடு வாங்க நினைக்கும்போது, அந்த சொத்துக்கான மதிப்பை கொடுத்துவிட்டால் மட்டும் போதுமானது அல்ல. இன்னும் சில வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் காரணமாக உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இந்த கூடுதல் செலவினங்களுக்கும் சேர்த்துதான் நீங்கள் பட்ஜெட் போட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஜிஎஸ்டி வரி
கட்டுமான நிலையில் உள்ள ஒரு வீட்டை நீங்கள் விலைக்கு வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தியே ஆக வேண்டும். இதுகுறித்து, வரிச் சேவைகள் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் விவேக் ஜலான் கூறுகையில், “சாதாரண வகை குடியிருப்புகளுக்கு 1 சதவீத ஜிஎஸ்டி வரியும், சொகுசு வீடுகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது’’ என்று கூறினார்.
சாதாரண வீடுகள் என்றால், மெட்ரோ நகரங்களில் 60 ஸ்கொயர் மீட்டர் கார்பெட் ஏரியா அளவில் வாங்கப்படும் வீடு ஆகும். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் வரையில் இருக்கலாம். அதுவே, மெட்ரோ அல்லாத நகரங்களில் 90 ஸ்கொயர் மீட்டர் கார்பட் ஏரியா கொண்டதாக இருக்கலாம்.
இதையும் படிங்க.. BSNL 4G: சுதந்திர தினத்தன்று வாடிக்கையாளர்களுக்கு சொல்ல போகும் குட் நியூஸ் இதுதான்!
கட்டுமான நிலையில் இருக்கும் வீடுகளுக்கு தான் நீங்கள் வரி செலுத்த வேண்டும். அதுவே வீட்டை கட்டி முடித்து, உங்கள் டெவலப்பர் சார்பில் கம்ப்ளீஷன் சர்டிபிகேட் வாங்கி விட்டால், நீங்கள் வரி செலுத்த தேவையில்லை.
பத்திரப்பதிவு
வீடு வாங்குபவர்களிடம் ஜிஎஸ்டி வரியை மட்டும் அரசு வசூலிக்கவில்லை. மாறாக, நீங்கள் வாங்கும் வீட்டை உங்கள் பெயரில் பதிவு செய்யும்போது பத்திர செலவு மற்றும் பதிவுக் கட்டணம் போன்றவற்றை நீங்கள் செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணம் என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுகிறது. தோராயமாக நீங்கள் சொத்து மதிப்பின் 8 சதவீதம் வரை பதிவுக் கட்டணமாக செலுத்த நேரிடலாம். உதாரணத்திற்கு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை நீங்கள் வாங்கினால் ரூ.4 லட்சம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க.. அதிர்ச்சி தரும் பெர்சனல் லோன் பற்றிய உண்மைகள்.. இனியாவது கவனமாய் இருங்கள்!
டிரான்ஸ்ஃபர் கட்டணம்
ஒரு ஹவுசிங் சொசைட்டி திட்டத்தில் நீங்கள் வீடு வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் டிரான்ஸ்ஃபர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அது கட்டுமான நிலையில் இருந்தால் டிரான்ஸ்ஃபர் கட்டணத்தை உங்கள் டெவலப்பர் செலுத்தி விடுவார். பொதுவாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 முதல் ரூ.250 வரை டிரான்ஸ்ஃபர் கட்டணம் செலுத்த நேரிடலாம்.
புரோக்கரேஜ் கட்டணம்
நீங்கள் பழைய வீடு ஒன்றை வாங்குகிறீர்கள், அதுவும் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலமாக என்றால், கட்டாயம் நீங்கள் புரோக்கரேஜ் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக, ஒரு சொத்தின் மதிப்பில் 1 அல்லது 2 சதவீதம் வரையில் புரோக்கரேஜ் கட்டணமாக ஏஜெண்ட்கள் வசூல் செய்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.