தனக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற கனவு இந்த பூமியில் மனிதராய் பிறந்த அனைவர் இடத்திலும் உண்டு. இதற்காக பலரும் தங்களது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்ட பணத்தை சேமித்து வைக்கின்றனர். அப்படி சேமித்து வைத்த பணத்தை கண்ணை மூடிக்கொண்டு செலவிடாமல், கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து வீடு வாங்க மழைக்காலம் மிகவும் சிறப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் பொதுவாக பலரும் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மழைக்காலத்தில் புதிய வீடு வாங்குவது கிடையாது. ஆனால் மழைக்காலத்தில் வீடு அல்லது நிலையான சொத்துக்களை வாங்க சிறந்த நேரமாகும். ஏனெனில் வெளியே இருந்த பார்க்க பளபளப்பாய் இருக்கும் வீடு, கடை போன்ற சொத்துக்களில் விரிசல், மற்றும் கசிவுகள் உள்ளதா என்பதை பருவமழைக் காலத்தில் அறிந்து கொள்ளலாம். மழையின் போது வீடுகளை ஆய்வு செய்வது ஒரு வீட்டின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துகிறது.
இருப்பினும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் - பொதுவாக அதிகரித்து வருவதால், புது வீடு வாங்கும் கனவுடன் இருந்த பலரும் தற்போது அந்தர் பல்டி அடித்து வருகின்றனர். அதற்கு முன்னதாக நீங்கள் வீட்டைத் தேடும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை கீழே விளக்கியுள்ளோம்.
வீட்டை ஆய்வு செய்வது:
மழை நேரத்தில் வீடு வாங்குவது சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா?, வணிக நடவடிக்கைகள் குறைவாக உள்ளனவா?, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கண்டறிய சரியானது.
பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1 முதல் தடை..! இந்த பொருளையெல்லாம் பயன்படுத்தினால் அபராதம்
மழை காலத்தில் தான் கட்டிடங்களில் உள்ள பிரச்சனைகள் வெளியே தெரிய வரும். மழை காலத்தில்தான் ஒரு வீட்டின் உண்மையான நிலைமை தெரிய வரும். மழைக்காலத்தில் தான் கட்டிடங்களில் ஏற்படும் கசிவுகள், தண்ணீர் பிரச்சனைகள் மற்றும் கட்டிடத்தின் அடியில் இருக்கும் உள் கட்டமைப்பு ஆகியவை வெளிப்படையாக தெரிய வரும். டெவலப்பர்களால் கட்டப்பட்ட வீடுகளை வாங்க தீர்மானித்தால் அதனை நன்றாக பரிசோதித்து வாங்க, கோடை காலத்தை விட மழைக்காலம் மிகவும் சிறந்தது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
விலை நிர்ணயம்:
வீட்டு விலைகள் குறையவில்லை என்பது உறுதியானது. சில டெவலப்பர்கள் ஏற்கனவே விலை உயர்வை விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் ஊதிய உயர்வு காரணமாக டெவலப்பர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். டெவலப்பர்களால் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது வீடுகளின் விலை மேலும் உயரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது டெவலப்பர்கள் தள்ளுபடி விலையில் வீடுகளை விற்காவிட்டாலும், அதற்கு ஈடாக ஏதாவது இலவசங்களை கொடுக்க முன்வரலாம். அதேபோல் முன்-அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் முன்பணம் செலுத்த போதுமான வங்கி இருப்பு ஆகியவை, நீங்கள் ஒரு வீட்டை வாங்குவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள் என்பது கட்டுமான நிறுவனத்தினருக்கு நன்கு எடுத்து காட்டுகிறது.
ஊழியர்களின் ஊதியம் குறையும், பணி நேரம் மாறும்... ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்
ஒருவேளை நீங்கள் வீடு வாங்குவதற்கான பணத்தை கையில் வைத்திருந்தால், டெவலப்பர் மற்றொரு வாடிக்கையாளர் கிடைக்க தாமதமாகலாம் என நினைத்து சலுகை விலையில் வீட்டை விற்க தயராகும் வாய்ப்புகளும் உண்டு.
வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது மலிவு விலை அழுத்தத்திற்கு உள்ளாகலாம். நைட் ஃபிராங்க் இந்தியாவின் மலிவுத்திறன் குறியீட்டின் நடு ஆண்டு மதிப்பாய்வின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் ஒட்டுமொத்த 90 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இதனால் வீட்டு கடன் உள்ளிட்ட கடனுக்கான மாத தவணையானது 6.97 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் சந்தைகள் நிலம், வீடு வாங்குவோரின் அளவை 2 சதவீதம் வரை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சரியான கடனை வாங்குங்கள்:
வீடுகளின் விலை உயர்வை எண்ணும் போது, அதனை வாங்குவதற்கு வீட்டுக் கடன்கள் தவிர்க்க முடியாதவை. கவனமாக மதிப்பிடப்பட்ட கடன் விருப்பம் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
கடன் ஆலோசனை நிறுவனமான MortgageWorld.in இன் நிறுவனர் விபுல் படேல் கூறுகையில், “விரைவில், கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களுக்கான கட்டணங்கள் மற்றும் பிற சலுகைகளைத் தள்ளுபடி செய்யும் மழைக்கால சிறப்பு வீட்டுக் கடன் திட்டங்களை வெளியிடுவார்கள்” என கூறுகிறார்.
உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆகஸ்ட் 2021ல் மான்சூன் தமாகா சலுகையை அறிவித்தது, வீட்டுக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி அளித்தது.
மழைக்காலத்தில் வீடு வாங்க விரும்புவோரிடம் வங்கிகள் இந்த சமயத்தில் அதிக கேள்விகளை எழுப்புவதில்லை. மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு கடனை வழங்க முன்வருகின்றன. முடிந்தால், வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், ஓரிரு ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் வீட்டுக் கடனுக்கு செல்ல முயற்சிக்கலாம்.
அதிகரித்து வரும் வட்டி விகிதங்களை கருத்தில் கொண்டு கடன் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மாத, மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகையானது உங்கள் நிகர வருவாயில் 40-50 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதேபோல் பொதுவாக வீட்டு கடன் 10 அல்லது 20 ஆண்டுகளைக் கொண்ட நீண்ட கால கடன்கள் என்பதால், இடையில் வட்டி விகிதங்கள் உயரும் வாய்ப்புள்ளது. எனவே அதனையும் கணக்கில் கொண்டு ஒருவர் வீட்டுக்கடனுக்கு திட்டமிடுவது நல்லது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.