Home /News /business /

Home Loan low interest rate: ஹோம் லோன் எங்க கம்மியா தர்றாங்கன்னு தேடி அலையாதீங்க.. இந்தாங்க லிஸ்ட்!

Home Loan low interest rate: ஹோம் லோன் எங்க கம்மியா தர்றாங்கன்னு தேடி அலையாதீங்க.. இந்தாங்க லிஸ்ட்!

ஹோம் லோன்

ஹோம் லோன்

ஹோம் லோனுக்கு வருமான வரி தாக்கல் செய்பவர்கள் என்றால் எளிதாக கடன் கிடைக்கும்.

    ஹோம் லோன் எந்த வங்கியில் கம்மி வட்டிக்கு கிடைக்குது, ஹோம் லோன் வாங்கும் போது கண்டிபாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    சொந்த வீடு கனவு என்பது அனைவருக்கும் இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் வரை சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள் பலர் இங்கு உண்டு. அதிலும் சென்னையில் ஒரு வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அந்த கனவை எட்டி பிடிக்க சேமிப்பை தாண்டி பலரும் நாடுவது வங்கி கடனை தான். வீடு கட்ட, வாங்க, புதுப்பிக்க எல்லாவற்றிற்கும் வங்கி கடன் தருகிறது. அதை சரியான முறையில் கையாண்டால் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் ஈஸியாக கடனை கட்டி முடித்து விடலாம். ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினாலும் சரி நஷ்டம் உங்களுக்கு தான்.

    ஹோம் லோன் வாங்குபவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். முடிந்த வரை ஹோம் லோன் மட்டுமில்லை எந்தவிதமான வங்கி கடனையும் பொதுத்துறை வங்கிகளில் வாங்க முயற்சி செய்யுங்கள். தனியார் ஊழியர்கள் என்றால், பணி பாதுகாப்பு இருக்காது எனவே, கவனமாக கடன் வாங்க வேண்டும். சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடாது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் என்றால் எளிதாக கடன் கிடைக்கும். எந்தவொரு வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு உங்களது கடனுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், நிலையானதா அல்லது ஃப்ளோட்டிங் விகிதமா? என்பதையும் முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். இதுவும் மிக மிக அவசியம்.

    அதே போல் எந்த வங்கியில் குறைந்த அளவு வட்டியில் ஹோம் லோன் தருகிறார்கள் என்பதை நன்கு விசாரித்து கொள்ள வேண்டும். முதிர்வு காலம் எத்தனை ஆண்டுகள், இன்சூரன்ஸ் முறை என அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்ட பின்பு தான் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும். தற்போது குறைந்த வட்டி வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் எவை என்ற விவரங்களை பார்க்கலாம்.

    யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 6.40 - 7.40% வட்டியில் கடன் வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி : 6.50 - 7.50%, எஸ்பிஐ : 6.70 - 6.90%, பஞ்சாப் நேஷனல் வங்கி : 6.75 - 8.80% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது.
    பேங்க் ஆஃப் பரோடா 6.50 - 8.10%, ஐடிபிஐ வங்கி 6.75 - 9.90%, கொடாக் மகிந்த்ரா பேங்க் 6.55 - 7.20%, ஐசிஐசிஐ வங்கி 6.70 - 7.55%, எச்டிஎஃப்சி வங்கி 6.70 - 7.65% வட்டியில் ஹோம் லோன் வழங்குகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Home Loan

    அடுத்த செய்தி