வீட்டுக் கடன்களை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், கடனாளிகள் கணிசமான அளவு வட்டியை மிச்சப்படுத்துவதோடு அவர்களின் நிதிச்சுமையை எளிதாக்க முடியும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
இன்றைக்கு உள்ள சூழலில் இ.எம்.ஐகளில் (EMI) தான் அனைத்துக் குடும்பங்களும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் கல்வித் தொடங்கி மருத்துவச் செலவுகள் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் கடன்களை வாங்கும் நிலையைத்தான் மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த சூழலில் தான் வாடகை வீட்டில் இருந்தால் மிகவும் சிரமமான சூழல் ஏற்படும் என்பதால் புதிய வீடு வாங்கவோ? அல்லது கட்டுவதற்கு எங்கெல்லாம் கடன்கள் கிடைக்கின்றது என மக்கள் தேடி அலைகிறார்கள். இவர்களுக்காகவே தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிடுகின்றனர்.
பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்.ஐ.சியில் இந்த பாலிசியை எடுப்பது அவ்வளவு நல்லது!
இவ்வாறு தங்களுக்கான சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்து வீட்டுக்கடன்களை வாங்கியவர்கள், வாங்கிய கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வட்டிப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இந்நிலையில் உங்கள் வீட்டுக்கடனை முன்கூட்டியே செலுத்தும் போது நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்துக்கொள்வோம்
வீட்டுக்கடன் முன்கூட்டியே செலுத்தும் போது நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்:
வீடு என்பது பலரின் கனவு. இதற்காக கடன்களை வாங்கும் போது 20 முதல் 30 ஆண்டுகள் வரையில் இ.எம்.ஐ செலுத்துவதற்காக நேரம் வழங்கப்படும். ஆனால் நீண்ட காலமாக நாம் கடன்களைக் கட்டும் போது அதிக வட்டியை நாம் தர வேண்டியிருக்கும். எனவே முன்கூட்டியே கடன்களை செலுத்துவது உங்களுக்கு பலனளிக்கும்.
நீங்கள் வாங்கிய கடனுக்கு முன்பணம் செலுத்துவதன் மூலம், வீட்டுக் கடன் வாங்குபவர் EMI தொகை அல்லது கடன் காலத்தையோ குறைக்கலாம். ஆனால் கடன் காலத்தைக் குறைப்பதன் மூலம், கடன் வாங்கியவர் EMI தொகையை அப்படியே வைத்திருப்பார்கள். எனவே இருப்பினும் EMI-யில் முதன்மைப் பகுதி அதிகரிக்கும். இதனால் ஒட்டுமொத்த கடனை இன்னும் வேகமாக செலுத்த முடியும்.
ஜாலியோ ஜிம்கானா.. பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்!
கடன் வாங்கியவுடன் தொடர்ச்சியாக இ.எம்.ஐ. களை நாம் செலுத்துவோம். ஆனால் அவ்வாறு செய்வது தவறான விஷயம். வங்கிகள் அல்லது தனியார் நிறுவனங்களின் மூலம் கடன்களை வாங்கிய பின்னர், குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறை உங்களது வட்டி விகிதம் எவ்வளவு என்பதைக் கேட்டறிய வேண்டும். குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, 3 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறும் மாறக்கூடும். இவ்வாறு செய்வதன் மூலம் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப நாம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ தொகையும் மாறுபடும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.
வீட்டுக் கடன் வட்டியைப் பொறுத்தவரை, ஃப்ளோட்டிங் ரேட்டையே பலரும் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். இதன் அடிப்படையில் வீட்டுக் கடன் வாங்கினால், கடன்களுக்கான வட்டி குறையும்போது கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகையும் குறையும். எனவே வாடிக்கையாளர்கள் ஃப்ளோட்டிங் ரேட்டைத் தேர்வு செய்து கொள்ளவும்.
வீட்டுக் கடனில் வரி-சேமிப்புப் பலன்கள் அதிகமாக இருப்பதால், முன்கூட்டியே பணம் செலுத்துதல், நிலுவையில் உள்ள அசல் மற்றும் வட்டி அவுட்கோ மீதான வரிச் சேமிப்பை பாதிக்கும் சூழல் ஏற்படும். எனவே நீங்கள் முன்கூட்டியே செலுத்துவதற்கு முன்னர் வரி நிபுணரை ஆலோசிக்க வேண்டும்.
குழந்தைகளின் கல்விக்கான கடன், மருத்துவ செலவுக்கான கடன் இருக்கும் நேரத்தில் முன்கூட்டியே கடன் தொகையை செலுத்தும் முன்னர் நிதானமாக இருக்க வேண்டும். பாதி பணத்தை செலுத்தினாலும் இ.எம்.ஐ தொகை குறைகிறதா? என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டுக்கடனுக்காக முன்பணம் செலுத்துதல் வட்டிச் செலவைக் குறைக்க உதவும் அதே வேளையில், ஒரு மாற்று வழியையும் தேர்வு செய்யலாம், அதாவது, மறைமுகக் கட்டணங்கள் அல்லது செலவுகள் இல்லாமல் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் மார்க்கரில் கடன் வழங்குபவர்கள் இருந்தால், வீட்டுக் கடன் இருப்புப் பரிமாற்றம் செய்யலாம். இது சேமிப்பு மற்றும் முதலீடுகளை பாதிக்காமல் வட்டி செலுத்துதலை கணிசமாக குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.