சொந்த வீடு கனவை நிஜமாக்குங்கள்... ஹோம் லோன் வாங்குவது ரொம்ப ஈஸி!

ஹோம் லோன் வாங்குவது ஈஸி

கண்டிப்பாக சொந்த வீடு கனவு உள்ளவர்களுக்கு இது சூப்பரான சலுகை.

 • Share this:
  எஸ்பிஐ வங்கியில் ஹோம்லோன் வாங்கும் முறையில் இருக்கும் எளிமையான வசதி குறித்த பார்வை.

  சொந்த வீடு என்பது இன்றுவரை பலரின் கனவாக்வே உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு எளிதான் ஒன்றல்ல. ஆனாலும் இங்கு வீடு வாங்க வேண்டும் என்பது நடுத்தர குடும்பங்கள் தொடங்கி வசதி படைத்தவர்கள் வரை ஆசைப்படாதவர்களே இல்லை. ”நமக்குன்னு ஒரு சொந்த வீடு ”அப்படினுக்கு தான் அவர்களின் கனவு தொடங்குகிறது.இதுப்பொன்ற சமயங்களில் தான் எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகள் நமக்கு கைக்கொடுக்கிறது. அந்த வாய்ப்பை நாமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஹோம்லோன் பற்ரி சரியான புரிதல்கள் இல்லாதவர்கள் இதை படியுங்கள். பயன்பெறுவீர்கள்.

  மன்சூன் தமக்கா ஆஃபர் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கியில் இருக்கும் சலுகை குறித்து கேள்விபட்டுள்ளீர்களா? கண்டிப்பாக சொந்த வீடு கனவு உள்ளவர்களுக்கு இது சூப்பரான சலுகை.

  இதில் என்ன ஸ்பெஷல் என்றால் 100% ப்ரோசசிங் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கு முன்பு ப்ரோசசிங் கட்டணமாக 0.40% இருந்தது.எஸ்.பி.ஐ. வங்கி வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியானது 6.70% ஆகும். இந்த மன்சூன் டமாக்கா ஆஃபர் உங்களுக்கு உள்ளதா என்பதை நீங்கள் வங்கிக்கு சென்று விசாரிக்கலாம். (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

  பெண்களுக்கு கூடுதல் சலுகைகளும் உண்டு. யோனோ செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமுறை அருகில் இருக்கும் எஸ்பிஐ வங்கிக்கு சென்று இந்த திட்டம் குரித்து தீர விசாரித்து தேவைப்பட்டால் அப்ளை செய்யுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: