முகப்பு /செய்தி /வணிகம் / வாட்ஸ்அப் மூலம் வீட்டு கடன் திட்டம்..! கலக்கும் பிரபல நிறுவனம்..

வாட்ஸ்அப் மூலம் வீட்டு கடன் திட்டம்..! கலக்கும் பிரபல நிறுவனம்..

வாட்ஸ்அப் மூலம் வீட்டு கடன்

வாட்ஸ்அப் மூலம் வீட்டு கடன்

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், சம்பளம் பெறும் கடன் விண்ணப்பதாரர்கள் வாட்ஸ்அப் மூலம் ஃப்ரெஷ் ஹோம் லோன் மற்றும் ஹோம் லோன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் ஆகிய இரண்டிற்குமே விண்ணப்பிக்கலாம் என கூறி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வீடு வாங்க திட்டமிடுபவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வாட்ஸ்அப் மூலம் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் ஆன்லைன் ஹோம் லோன் அப்ளிகேஷன் திட்டத்தை வாட்ஸ்அப்-பில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 6 முதல் வாட்ஸ்அப்பில் ஆன்லைன் ஹோம் அப்ளிகேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், இந்த வசதி சம்பளம் பெறும் எந்தவொரு கடன் பெற விரும்பும் நபரும் தேவைப்படும் ஒரு சில விவரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்று பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், சம்பளம் பெறும் கடன் விண்ணப்பதாரர்கள் வாட்ஸ்அப் மூலம் ஃப்ரெஷ் ஹோம் லோன் மற்றும் ஹோம் லோன் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் ஆகிய இரண்டிற்குமே விண்ணப்பிக்கலாம் என கூறி இருக்கிறது.

Read More : இனி ஈஸியா பணம் அனுப்பலாம்.. வெளிநாடுகளிலும் வந்தது போன் பே..

வாட்ஸ்அப்பில் வீட்டு கடன் விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்:

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லோன் அப்ளிகேஷனுக்கு விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் எண், பான் போன்ற சில விவரங்கள் மட்டுமே தேவைப்படும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள இந்த விவரங்களை ஒரு விண்ணப்பதாரர் வழங்கிய பிறகு, அவர்கள் வீட்டு கடன் பெறுவதற்கான தங்களின் தகுதி (Eligibility) மற்றும் சலுகை தொகையை (offer amount) உடனடியாக சரி பார்க்கலாம். தவிர டிஜிட்டல் இன்-பிரின்சிபல் சேன்க்ஷன் லெட்டரை (Digital In-Principle Sanction Letter) பெற ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,999 + GST செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் BHF பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது.

வாட்ஸ்அப் மூலம் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டு கடன் விண்ணப்பத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது. படிப்படியான வழிகாட்டி கீழே:

- BHF-ன் வாட்ஸ்அப் நம்பரான 75075 07315-ஐ உங்கள் மொபைலில் சேவ் செய்து Hi என்று மெசேஜ் அனுப்பவும்.
- உங்கள் வீட்டு கடன் தகுதியை சரிபார்க்க பெயர், தொடர்பு எண், PAN உள்ளிட்ட கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமர்ப்பிக்கவும்.
- Digital In-Principle Sanction Letter-ஐ பெற ரூ.1,999 + ஜிஎஸ்டி செலுத்தவும்.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்:
சம்பளம் மற்றும் தொழில்முறை விண்ணப்பதாரர்களுக்கு பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களை ஆண்டுக்கு 8.60% என்ற வட்டி விகிதத்தில் வழங்குகிறது. கடன் வாங்குபவர்கள் தங்கள் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதத்துடன் இணைக்க இதில் அனுமதிக்கப்படுகிறது.
First published:

Tags: Bank, Home Loan, WhatsApp