பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 2022 முதல் ரெப்போ விகிதங்களை உயர்த்தியதிலிருந்து, புதிய மற்றும் ஏற்கனவே வீட்டுக்கடன் கட்டி வருபவர்கள் அதிக EMI செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டுக் கடன் பெறுவது முன்பை விட தற்போதும் மிகவும் எளிதாக இருப்பதால், ஒவ்வொரு நுகர்வோரும் தங்களுக்கான சிறந்த வட்டி விகிதங்களைக் கண்டறிய விரும்புகிறார்கள்.
மாத சம்பளம் இல்லாமல் கடன் வாங்குபவர்கள் அல்லது கிரெடிட் ஸ்கோர்கள் 750க்கு கீழ் உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன் விகிதங்கள் அதிகமாக இருக்கும். வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் விகிதங்கள் இதோ:
SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்
பொதுமக்களுக்கு கடன் வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான விளங்கும், SBI வீட்டுக் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை ஜூன் 15 அன்று 7.55 சதவீதமாக உயர்த்தியது. அதன் External Benchmark அடிப்படையிலான குறைந்தபட்ச கடன் விகிதத்தை (EBLR - External Benchmark-based Lending Rate) 7.05 சதவீதத்திலிருந்து 7.55 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும், எஸ்பிஐ ஒரு வருடத்திற்கான MCLR விகிதத்தை 7.20 சதவீதத்தில் இருந்து 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஜூன் 15, 2022 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
HDFC வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கியும் ஜூலை 7 ஆம் தேதி முதல் அனைத்து கடன் வட்டி விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது. ஒரே இரவில், ஒரு மாதம் மற்றும் மூன்று மாத கால HDFC வங்கி MCLR விகிதங்கள் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து முறையே 7.70%. 7.75% மற்றும் 7.80% என உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோட்டல், ரெஸ்டாரண்ட் பில்லில் சேவை வரி இருந்தால் செலுத்த வேண்டாம் - மத்திய அரசு உத்தரவு
ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்கான, எம்சிஎல்ஆர் விகிதங்கள் முறையே 7.90 சதவீதம் மற்றும் 8.05 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 20 bps அதிகரித்து 8.15 சதவீதம் மற்றும் 8.25 சதவீதமாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்
ஐசிஐசிஐ வங்கி 30 ஆண்டுகள் வரையிலான காலவரையறைகளுக்கு கணிசமான வட்டி விகிதங்களுடன் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. ஜூன் 8, 2022 முதல், ICICI வங்கி அதன் EBLR கடன் விகிதத்தை
புதுப்பித்துள்ளது. இதன்படி I-EBLR 8.60 சதவீதமாக(p.a.p.m.) உள்ளது.
BoB வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள்
பேங்க் ஆஃப் பரோடா அதிகபட்சமாக 30 வருடம் வரையிலான கடன் காலத்தை வழங்குகிறது. பணியாளர்கள் அல்லாத உறுப்பினர்களுக்கான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதம் முதல் 8.80 சதவீதம் வரை இருக்கும். அதே சமயம் ஊழியர்களுக்கு குறைந்த வட்டி விகிதமான 7.45 சதவீதம் பொருந்தும்.
ஆக்சிஸ் வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள்
ஆக்சிஸ் வங்கியின் வீட்டுக் கடன்கள்ரூ.3,00,000ல் இருந்து தொடங்குகின்றன. மேலும் இது நீண்ட கால, மேல்முறையீட்டு வட்டி விகிதங்கள், எளிமையான விண்ணப்ப நடைமுறை, doorstep service போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது.
மாத சம்பளக்காரர்களுக்கு ஆண்டுக்கு 7.60 சதவீதம் முதல் 7.95 சதவீதம் வரையிலான floating rate-ஐ வழங்குகிறது. மற்றும் வீட்டுக் கடனுக்கான நிலையான விகிதம் 12 சதவீதமாகவும் உள்ளது. சுயதொழில் செய்பவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான floating rate 7.70 சதவீதம் முதல் 8.05 சதவீதமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.