Home /News /business /

வீட்டு லோன் வாங்க சரியான நேரம்... நிபுணர்கள் சொல்வது என்ன?

வீட்டு லோன் வாங்க சரியான நேரம்... நிபுணர்கள் சொல்வது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

இது குறித்து பேசிய NAREDCO தேசிய தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தினி, தொடர்ந்து 6வது முறையாக வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை எனக் கூறினார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
புதிதாக வெளியிடப்பட்ட ரெப்போ வட்டி விகிதங்களில், குறைந்த வட்டியில் வழங்கப்படும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ், கொரோனா வைரஸ் 2வது அலையில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், தேவையை அதிகரிக்கவும் ரெப்போ வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நிலை சரியாகும் வரை, இதே நிலையை தொடர முடிவெடுத்திருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இது குறித்து பேசிய NAREDCO தேசிய தலைவர் நிரஞ்சன் ஹிராநந்தினி, தொடர்ந்து 6வது முறையாக வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை எனக் கூறினார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இடையே வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணம் எனத் தெரிவித்த அவர், கடந்த 20 ஆண்டுகளில் ப்ளோட்டிங் ரீட்டெய்ல் லோன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறினார். ப்ளோட்டிங் ரீட்டெய்ல் வட்டி விகிதம் நேரடியாக ரெப்போ வட்டி விகிதங்களில் எதிரொலிக்கும் என கூறிய நிரஞ்சன், ரிசர்வ் வங்கியின் முடிவு கடன் பெற்று வீடு வாங்க நினைப்பவர்களுக்கு உகந்த ஒன்றாக இருப்பதாக கூறினார். இந்த நிலை சில காலங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டு வசதித்துறையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள சரியான முடிவு என Nobroker.com இணை நிறுவனர் சவுரப் கார்க் கூறியுள்ளார். நிலையான மற்றும் குறைவான வட்டி விகிதங்கள் ரியல் எஸ்டேட் துறைக்கு வளர்ச்சியை கொடுக்கும் எனக் கூறியுள்ள அவர், பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தகுந்த விளைவுகளை இந்த முடிவு கொடுக்கும் என கூறினார். மகாராஷ்டிரா அரசு முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்தது, நல்ல அறிகுறியைக் ரியல் எஸ்டேட் துறையில் கொடுத்தாகவும், இந்த முறையை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என சவுரப் கார்க் தெரிவித்துள்ளார்.

Also read... இன்டர்நெட் இல்லாமல் SMS மூலம் பெற கூடிய ஆதார் சேவைகள் என்ன?

Transcon Developers இயக்குநர் கேடியா அகர்வால் பேசும்போது, ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்ற முடிவுகளை கடந்த சில காலாண்டுகளாகவே ரிசர்வ் வங்கி எடுத்து வருவதாகவும், இது நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் எனத் தெரிவித்தார். கொரோனா பரவல், 2வது அலையில் ஏற்பட்டுள்ள தாக்கம், பல்வேறு மாநிலங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் ஆகியவை ரியல்எஸ்டேட் துறைக்கு பின்னடைவாக இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்று என அகர்வால் கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Home Loan

அடுத்த செய்தி