சொந்த வீடு என்பது இன்றளவும் பலருக்கும் கனவாக தொடங்கி கனவாகவே போய் விடுகிறது. நகர்புற மக்களின் மிகப் பெரிய ஆசை எது என்று கேட்டால் சொந்தமாக ஒரு வீடு என்று தான் சொல்வார்கள். வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் கிடைக்கும் ஹோம் லோன்களை நம்பி தான் வீடு விஷயத்தில் அதிகம் இறங்குகின்றனர். ஆனால் இந்த வாய்ப்பு தகுதி, வருமானம் அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. கிரேட்டிட் ஸ்கோர், சூரிட்டி என ஏகப்பட்ட விதிமுறைகள். இதை எல்லாம் தாண்டி வட்டி மிகப் பெரிய ரோலை பிளே செய்கிறது.
என்ன தான் வங்கிகள் போட்டிப்போட்டு கொண்டு ஹோம் லோன் வட்டி குறைவு, செயலாக்க கட்டணம் இல்லை என விளம்பரம் செய்தாலும் தகுதி அடிப்படையில் வைத்து லோன் வழங்கப்படும் போது வட்டி விகிதம் நினைத்தத்கை விட அதிகமாகி விடுகிறது. அதற்கு தான் இந்த பதிவு. நாட்டின் மிகப் பெரிய பொத்துறை வங்கியான எஸ்பிஐயில் வீடு கட்ட, சொந்த வீடு வாங்க பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஹோம் லோன் வழங்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா?
UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!
எஸ்பிஐயில் பெண்களுக்கு இந்த விஷயத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்புச் சலுகையின் கீழ் பெண் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். சமீபத்திய அப்டேட்டின் படி எஸ்பிஐ வங்கியில் பெண்களுக்கு 6.65 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டியை விடவும் பெண்களுக்கு இந்த வங்கியில் ஹோம் லோனுக்கு குறைவான வட்டி. .
இதையும் படிங்க.. STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!
18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் காலம் மொத்தம் 30 ஆண்டுகள். அதே போல் இதற்கு செயலாக்க கட்டணத்தை தவிர்த்து கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் ஆன்லைனில் செக் செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Loan, SBI, State Bank of India