முகப்பு /செய்தி /வணிகம் / வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே ஹோம் லோன் வாங்கலாமா?

ஹோம் லோன்

ஹோம் லோன்

சொந்தமாக வீடு இருந்தால் மட்டுமே செட்டில் ஆகி விட்டதாக பலரும் நினைக்கிறார்கள்.

முதலீடு, சேமிப்பு என்று எவ்வளவு விருப்பங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் கனவு சொந்த வீடு. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வீடு வாங்க அல்லது கட்டலாம் என்ற காலம் முடிந்து, தற்போது பல்வேறு வங்கிகள் வருமானத்துகேற்றவாறு வீட்டுக்கடன் வழங்குகின்றன. பலரும் வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளிலேயே சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் முயற்சியில் வங்கிக்கடன் பெற்று புதிய வீட்டை சொந்தமாக்கிக்கொள்கின்றனர். ஆனால், சீக்கிரமாகவே வங்கிக் கடன் பெற்று வீடு வாங்குவது மிகவும் தவறான முடிவு என்பது நிபுணர்களின் கருத்து.

எப்போ வீடு வாங்கப் போறே – மற்றவர்கள் கொடுக்கும் அழுத்தம்

சொந்தமாக வீடு இருந்தால் மட்டுமே செட்டில் ஆகி விட்டதாக பலரும் நினைக்கிறார்கள். மாத வாடகைக்கு பதிலாக, EMI ஆக ஒரு தொகையை கட்டலாமே என்றும் சிந்திப்பார்கள். அது மட்டுமின்றி, சொந்த வீடு என்பது ஒரு உணர்வு! ஆனால், உணர்வு பூர்வமான விஷயங்கள் தவிர்த்து, நடைமுறை சார்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தவறான முடிவுகள் எடுக்காமல் இருப்பதே சரியான பாதையை செல்ல உதவும். வீடு வாங்கினால் போதும் என்பது மிகவும் தவறான எண்ணம். வீட்டுக் கடன் என்பது மிகவும் நீண்ட காலக் கடனாகும். அது மட்டுமின்றி, மாத சம்பளத்தில் அல்லது வருமானத்தில் கணிசமான தொகை மாதந்திர தவணைக்கு செலுத்த வேண்டும். இந்த விஷயங்கள் எதிர்பாராத நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

PF Account : மாத சம்பளக்காரர்கள் இருமடங்கு இழப்பில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்கள்!

அது மட்டுமின்றி, 30களில் நீங்கள் விருப்பபடி வாங்கும் வீட்டுக்கு, குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகளுக்காகவது emi கட்ட வேண்டும். இன்று நீங்கள் வாங்கும் வீடு, பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலவு செய்ய வேண்டும். அதே போல, நீங்கள் ஓய்வு பெறுவதற்குள், கூடுதலாக பல செலவுகள் மேற்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு கட்ட லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா? ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ்!

நிதி ரீதியான தவறுகளில் சரி செய்யக்கூடியவை மற்றும் சரி செய்ய முடியாதவை என்று இரண்டு வகைகள் உள்ளன. புதிய பிராண்டு மொபைல் போனை வாங்குவதும், புதிய மாடல் காரை வாங்குவதும் ஒன்றல்ல. அதே போல தான் வீட்டுக்கான கடன் வாங்குவதும். அது மட்டுமின்றி, இளம் வயதிலேயே வீடு வாங்கினால், உங்களால் வேறு எந்த விதத்திலும் சேமிக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு emi தொகை செலுத்துவது மிகவும் அலுப்பாகி விடும். எனவே, பலரும் எதிர்பார்க்கும் நிதி ரீதியான சுதந்திரம் அல்லது பாதுகாப்பு உங்களுக்கு ஒரே ஒரு வருமானம் இருந்தால் கிடைக்காது. சேமிப்பு, முதலீடு, தங்கம் உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்களில் இருந்து வருமானம் உங்களுக்கு நிதி பாதுகாப்பை அளிக்கும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank accounts, Bank Loan, Home Loan