Home /News /business /

ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!

ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!

ஹோம் லோன்

ஹோம் லோன்

ஹோம் லோன் EMI தொகையைக் குறைக்க முன்பணம் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கடனில் நிலுவையில் உள்ள தொகையில் 5% தொகையை முன்கூட்டியே செலுத்தி வர முயற்சி செய்ய வேண்டும்

  பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலை தொடருமானால், வட்டி விகிதங்களும் அதிகரிக்கும். எனவே, ஆர்பிஐயின் வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது உடனடியாக நடந்தது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய பாலிசி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் (Basis points) உயர்த்தியுள்ளது என்பது எதிர்பாராத நடவடிக்கை. ஒரு அவசரக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய வங்கியின் நாணயம் பாலிசிக் குழு(MPC) முக்கிய கட்டணங்களின் உயர்வுக்கு ஒருமனதாக வாக்களித்தது.

  அமைப்பில் அதிக பணப்புழக்கம், உயர்ந்து வரும் எரிபொருள் மற்றும் மூலப் பொருட்களின் விலை, மற்றும் அதிகரித்த அரசாங்கக் கடன் ஆகியவற்றால், பணவீக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள், என்று இரண்டு கடன்களின் அனைத்து பிரிவுகளிலுமே, வட்டி விகிதம் அதிகரிப்பதை காண முடிகிறது.

  இதுவரை இல்லாத உச்சபட்ச அளவு.. ஏப்ரல் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி வரி வசூல்!

  வீட்டுக் கடன் பொறுத்தவரை இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

  பெரும்பாலான வங்கிகள், தாங்கள் வழங்கும் கடனுக்கான விகிதங்களை, இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் அடிப்படையில் தான் நிர்ணயித்துள்ளன. அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 40% வீட்டுக் கடன்கள் ரெப்போ ரேட் போன்ற வெளிப்புற அளவுகோல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, அதிகரித்துள்ள இந்த ரெப்போ விகிதம், புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் மற்றும் ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் மிகக் குறைவான காலத்தில் விலை உயர்ந்த கடனாக மாறும்.

  ரெப்போ விகிதத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் உங்கள் கடன் விகிதங்களிலும் அதே அளவிலான மாற்றத்தை உண்டாக்கும். மேலும், இது உங்கள் கடனின் கால அளவையும் பாதிக்கும். இதன் விளைவாக, உங்கள் கடனைச் செலுத்தி முடிக்க உங்களுக்கு அதிக நேரம் இருந்தால், அது அதிகரித்து நீங்கள் நீண்ட காலத்திற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

  உதாரணமாக, நீங்கள் 50 லட்ச ரூபாயை, 7% வட்டி மற்றும் 20 வருட காலத்துக்கு பெற்றிருந்து, மாதாந்திர EMI யாக, வட்டியுடன் சேர்த்து ரூ. 38,765 செலுத்துகிறீர்கள் மற்றும் பாக்கி இருக்கும் தொகை ரூ. 43.03 லட்சம்.

  வட்டி 7.4% ஆக உயர்ந்தால், உங்கள் மாதாந்திர EMI ரூ. 39,974 ஆக அதிகரிக்கும் மற்றும் நிலுவையில் இருக்கும் கடன் தொகை ரூ. 45.93 லட்சமாக உயரும். இதில், கடன் செலுத்தும் பணிக்காலம் சுமார் 18 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.

  குழந்தைகள் வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? ஒருவேளை செய்தால் என்னென்ன வசதிகள் கிடைக்கும் முழு விபரம்!

  MCLR உடன் இணைக்கப்பட்ட கடன்கள் பெற்றவர்களும் வட்டி விகித உயர்வால் கூடுதல் அழுத்தத்தை உணரக்கூடும். பல முக்கிய வங்கிகள் சமீபத்தில் தான் தங்கள் MCLR விகிதங்களை உயர்த்தியது, இதனால் கடன்களின் வட்டி வகிதமும் உயர்த்தியுள்ளன.

  கடன் வாங்கியவர் என்ன செய்யலாம்?

  உங்கள் EMI தொகையைக் குறைக்க முன்பணம் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கடனில் நிலுவையில் உள்ள தொகையில் 5% தொகையை முன்கூட்டியே செலுத்தி வர முயற்சி செய்ய வேண்டும். ஆனால், உங்களால் இந்த அளவு தொகையை செலுத்த முடியவில்லை என்றால் கூட, வருடத்திற்கு ஒரு EMI என்ற கணக்கில், சிறிய தொகையைக் கூட முன்பணமாக செலுத்துவது, நீங்கள் சேமிக்க உதவும்.

  உங்கள் வீட்டுக் கடனைச் செலுத்த உங்களுக்கு போதிய காலம் (டென்யூர்) இருந்தால், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குபவர்களை அணுகலாம். நீங்கள் சரியாக கணக்கு போட்டு பார்த்து, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நிறுவனத்திற்கு மாறுவதன் மூலம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Home Loan, RBI

  அடுத்த செய்தி