Home /News /business /

HOME LOAN: கனவு வீட்டை அடைய கைக்கொடுக்கும் வங்கிகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

HOME LOAN: கனவு வீட்டை அடைய கைக்கொடுக்கும் வங்கிகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

ஹோம் லோன்

ஹோம் லோன்

HOME LOAN apply online : , நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிறப்பு வீட்டு கடன் சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

  குடும்பத்தில் இருவர் சம்பாதித்தாலும் சரி, ஒருவர் சம்பாதித்தாலும் சரி பலரின் நீண்ட நாள் கனவாக, குறிக்கோளாக, லட்சியமாக இருப்பது ஒரு வீடு. கூட்டு குடும்பம் என்பது இருந்தவரை பலர் சேர்ந்து ஒரு வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அந்த நாட்களில் வீடுகளின் தேவை இப்போது போல இருக்கவில்லை. ஆனால் காலங்கள் மாற மாற கூட்டு குடும்பம் என்பது அடியோடு குறைந்து போனது.

  இதையும் படிங்க.. pre approved loan : இந்த 3 தவறுகளை மட்டும் எப்போதுமே செய்து விடாதீர்கள்!

  தவிர கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு வேலை நிமித்தமாக குடி பெயர்ந்தோரால் வீடுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குடும்ப செலவுகளை தாண்டி ஓரளவு வருமானம் ஈட்டுபவர்கள் முதல் ஐடி போன்ற துறைகளில் நன்றாக சம்பாதிப்பவர்கள் வரை தங்கள் கனவான வீடு என்பதை அடைய பலரும் வீட்டு கடனை பெரிதும் சார்ந்து இருக்கிறார்கள். தங்களது கனவு இல்லத்தை ஒருவர் வாங்க நிதி நிறுவனம் அல்லது வங்கியில் இருந்து பணத்தை கடன் வாங்கி கொள்ள ஹவுசிங் லோன் (ஹோம் லோன்) உதவுகிறது.

  ஹோம் லோன்கள் என்பவை அட்ஜஸ்ட் செய்ய கூடிய அல்லது நிலையான வட்டி விகிதம் மற்றும் கட்டண விதிமுறைகளைக் கொண்டிருக்கும். கடனின் தன்மையை பொறுத்து 10-30 ஆண்டுகளுக்கு இடையில் மாறுபடும் காலக்கட்டத்தில் எளிதான மாதாந்திர தவணைகள் அல்லது EMI-க்களில் கடன் தொகையை வட்டியுடன் கடன் வாங்குபவர் திருப்பி செலுத்த வேண்டும்.

  சில லட்சங்கள் முதல் கோடிகள் வரை நம்பிக்கையான நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளிடமிருந்து நியாயமான வட்டி வீதத்தில் கடன் தொகை கிடைப்பதால், தங்களது கனவை நிஜமாக்க பலர் ஹவுசிங் லோன் எடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்கின்றனர். இந்த சூழலில் வீட்டு கடன்களை பெற வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிறப்பு வீட்டு கடன் சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

  இதையும் படிங்க.. மாதம் 1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுடைய 25 வயதில் இதை செய்யுங்கள்!

  தற்போது பிரபல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்

  யுசிஓ - 6.50%

  எஸ்பிஐ - 6.65%

  பஜாஜ் ஃபினாஸ் - 6.70%

  எச்டிஎப்சி - 6.75%

  ஐடிபிஐ - 6.75%

  பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.75%

  மகாராஷ்ட்ரா வங்கி - 6.80%

  செண்ட்ரல் பேங்க் - 6.85%

  பேங்க் ஆஃப் பரோடா - 6.90%

  பேங்க் ஆஃப் இந்தியா - 6.90%

  இந்தியன் வங்கி - 6.90%

  சிந்து வங்கி - 6.90%

  யூனியன் பேங்க் - 6.90%

  எல் ஐ.சி - 6.90%

  பஞ்சாப் பேங்க் - 6.95%

  ஆக்சிஸ் - 7.00%

  கொடாக் மகேந்திரா - 7.00%

  எச்.டி.எப்.சி - 7.00%

  கனரா வங்கி - 7.05%

  ஐஓபி - 7.05%

  ஐசிஐசிஐ - 7.10%

  கரூர் வைசியா - 7.15%

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Bank Loan, Home Loan, Loan

  அடுத்த செய்தி