• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • லேமினேஷன் தோற்றமளிக்கும் Asian Paints இன் Ultima Protek உடன் உச்சகட்டப் பாதுகாப்பு

லேமினேஷன் தோற்றமளிக்கும் Asian Paints இன் Ultima Protek உடன் உச்சகட்டப் பாதுகாப்பு

Asian paints

Asian paints

புதிய லேமினேஷன் கார்டு தொழில்நுட்பத்துடன், இது உங்கள் வெளிப்புறச் சுவர்களை ஈரப்பதம், பாசி, பிளவுகள், பூஞ்சை மற்றும் வண்ண மறைதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக காக்கிறது. கடும் மழை, தீவிரமான தூசி அல்லது கடுமையான சூரிய ஒளி இருந்தாலும், Ultima Protek உங்கள் வெளிப்புறச் சுவர்களை புத்தம்புதியதாகவும் ஒளிரக் கூடியதாகவும் காட்டும்.

 • Share this:
  ரன்பீர் கபூர் லேமினேஷனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரங்கள் காட்டுகிறது.

  நீங்களே இதைப்பற்றி ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். 'லேமினேஷன்' என்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாதுகாப்பு? வெகுகாலத்திற்கு ஒன்று நீடிக்குமாறு பாதுகாப்பதற்கான ஒரு வழி? எதையாவது ஒன்றினை 'லேமினேட்' செய்ய நினைக்கும் பொழுது, நாம் எப்பொழுதும் நமக்கு முக்கியமானவற்றைப் பற்றி நினைப்போம். அதிலும் கூடுதலான மற்றும் வலுவான பாதுகாப்பு தேவைப்படும் விஷயங்களை. அதாவது, நாம் உண்மையிலேயே நேசிக்கும் பொருட்களை நினைப்போம்; ஆனால், அந்தக் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளை, படங்கள், ஆவணங்கள் அல்லது ஏதேனும் பொருட்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? உங்கள் வியர்வைக்கும், கண்ணீருக்கும், கடின உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் விளைவாக அமைந்து, உங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒன்றினை ஏன் நீங்கள் லேமினேட் செய்யக்கூடாது? ஏன் உங்கள் வீட்டை லேமினேட் செய்யக்கூடாது?

  இதைத்தான் Asian Paints Ultima Protek வழங்கவிருக்கிறது. இதன் புதிய லேமினேஷன் கார்டு தொழில்நுட்பத்துடன், இது உங்கள் வெளிப்புறச் சுவர்களை ஈரப்பதம், பாசி, பிளவுகள், பூஞ்சை மற்றும் வண்ண மறைதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக காக்கிறது. கடும் மழை, தீவிரமான தூசி அல்லது கடுமையான சூரிய ஒளி இருந்தாலும், Ultima Protek உங்கள் வெளிப்புறச் சுவர்களை புத்தம்புதியதாகவும் ஒளிரக் கூடியதாகவும் காட்டும்.

  Asian Paints தங்கள் தயாரிப்புகளில் ஒரு அருமையான வெளிப்புற வண்ணப்பூச்சினை கொண்டிருக்கிறது. இதனால் வாங்குபவருக்கு தீர்மானமான நம்பிக்கையை வழங்குகிறது. உங்கள் வெளிப்புற சுவர்களில் இந்த வண்ணப்பூச்சினை பயன்படுத்தினால், நீங்கள் செய்ய வேண்டியது, 'சூரிய ஒளியும், தூசியும்,மழையும் வந்தால் வரட்டுமே' என்று நினைத்துக்கொண்டு கவலையின்றி ஓய்வெடுக்க வேண்டியது மட்டும்தான்.எந்த நிலையில் இருந்தாலும், Asian Paints Ultima Protek உங்கள் வீட்டுச் சுவர்கள் மீது லேமினேஷனின் காவலை அளித்து பாதுகாப்பாக வைத்திருக்கும்!

  இது உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டவும், Ultima Protek எவ்வளவு அருமையாக உள்ளது என்பதை வெளிப்படுத்த, Asian Paints சமீபத்தில்,அவர்களது நிறுவனப் பிரதிநிதியான ரன்பீர் கபூர் இடம்பெற்றிருக்கும் ஒரு வினோதமான, நகைச்சுவையான தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் இதுவரை நீங்கள் காணாத ஒரு அவதாரத்தில் ரன்பீர் கபூரைப் பார்க்க இயலும். மேலும் இவர், முதல் முறையாக இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். அந்த தொலைக்காட்சி விளம்பரம், உங்கள் பார்வைக்கு இங்கே: புதிய Ultima Protek விளம்பரத்தைப் பற்றி, Asian Paints லிமிடெட் இன் நிர்வாக இயக்குனர்(MD) மற்றும் தலைமை செயல் அலுவலரான(CEO) அமித் சிங்கிள் கூறுகையில், ``நுகர்வோர் தங்கள் வீடுகளை எப்போதும் அழகானதாக வைத்திருக்கத் தீர்வுகளை தேடுகிறார்கள். இன்றைய வீடுகளுக்கு, கடும் மழை முதல் கடுமையான சூரிய ஒளி வரை உள்ள பல வானிலை மாறுதல்கள் மற்றும் இப்புதிய கால பிரச்சினையான தூசி போன்றவை சவால் அளிக்கின்றன. பல காலமாக Asian Paints தமது தயாரிப்புகள் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருந்து, நுகர்வோருக்கு சிறந்தவற்றை மட்டுமே வழங்கிவருகிறது. Ultima Protek-ல் அமைந்துள்ள லேமினேஷன் கார்டு தொழில்நுட்பம் அவர்களது வீடுகளை லேமினேட் செய்வதற்கும், இன்னும் பற்பல ஆண்டுகளாக அதன் அழகை பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம், லேமினேஷன் தொழில்நுட்பத்துடன் அமைந்த Ultima Protek-னை, வெளிப்புற வண்ணப்பூச்சுகளின் தங்கத்தரமாக வெளிப்படையாக நிறுவுகிறது."

  இது ஒரு கூட்டு பதிவாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ram Sankar
  First published: