உங்களிடம் சொந்த வீடு இருக்கா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

வீட்டுக்கு காப்பீடு

இந்த திட்டத்தின் கீழ் ரூ .3,00,000 வரை பொதுமக்கள் காப்பீட்டு தொகை பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது

 • Share this:
  உங்களிடம் சொந்த வீடு இருக்கா? அப்ப உங்களால் வீட்டுக்கு காப்பீடு பெற முடியும் தெரியுமா?

  நடுத்தர மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இயற்கை பேரிடர்களால் வீடுகளுக்கு ஏற்படும் சேதத்தால் பெரும்பாலான நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகுகின்றன. இதை கருத்தில் கொண்டு இயற்கை பேரிடர்களால் சேதம் அடையும் வீடுகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

  ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டங்கள் விபத்து மற்றும் இறப்பு காப்பீடு வழங்கி வருகிறது. இனிவரும் காலங்களில் இந்த திட்டம் மூலம் வீட்டிற்கு காப்பீட்டு திட்டத்தையும் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் விண்ணபித்து மக்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பலத்த மழை மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த திட்டம் பெருமளவில் உதவும். இதுக்குறித்த பேச்சுவார்த்தையில் தற்போது உள்ள மத்திய அரசு கூடிய விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல செய்தி நிறுவனம், இதுக்குறித்த தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் ரூ .3,00,000 வரை பொதுமக்கள் காப்பீட்டு தொகை பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. மத்திய அரசு இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு, இந்த வீட்டு காப்பீடு திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ற முழு விவரமும் தெரிய வரும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: