இந்திய நிதி அமைச்சர்களும் லெதர் சூட்கேஸும்... ஓர் ஆச்சர்ய வரலாறு...!

தொடர்ந்து நிதி அமைச்சர்கள் சூட்கேஸ் நிறத்தை மாற்றினாலும், பட்ஜெட் தாக்கல் செய்ய லெதர் சூட்கேஸ் இல்லாமல் வந்ததே இல்லை.

Web Desk | news18
Updated: February 1, 2019, 11:49 AM IST
இந்திய நிதி அமைச்சர்களும் லெதர் சூட்கேஸும்... ஓர் ஆச்சர்ய வரலாறு...!
பட்ஜெட் சூட்கேஸ்
Web Desk | news18
Updated: February 1, 2019, 11:49 AM IST
2019-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகக் இன்று காலை கையில் சிவப்புப் பெட்டியுடன் காட்சி அளித்தார் நிதி அமைச்சர் பியுஷ் கோயல்.

இன்று நேற்று இல்லாமல், காலம் காலமாக பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் நிதி அமைச்சர்கள் கையில் அந்த லெதர் சூட்கேஸை மறக்காமல், மாற்றாமல் எடுத்துவருவதன் பின்னணி தெரியுமா? வரலாறு 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயர்கள் ‘பட்ஜெட் கேஸ்’ என்ற பெயரில் நிதி அறிக்கைத் தாக்கல் நிகழ்வை அழைத்துள்ளார்கள்.

’பட்ஜெட்’ என்ற வார்த்தை ‘bougette' என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியுள்ளது. bougette என்றால் லெதர் பை என்று அர்த்தம்.

இதுவே பின்னாளில் பட்ஜெட், நிதி ஒதுக்கீடு என மருவி வந்துள்ளது. அதன் பின்னர், 1860-ம் ஆண்டில் அன்றைய பட்ஜெட்டை பிரிட்டன் அரசவையில் தாக்கல் செய்ய வில்லியம் கிளாட்ஸ்டோன் சிவப்பு நிற சூட்கேஸில் தாக்கல் செய்துள்ளார்.

அதன் பின்னர் தொடர்ந்து இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்ய தொடர்ந்து சூட்கேஸ் கலாச்சாரம் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவின் 1947-ம் ஆண்டு பட்ஜெட்டை அன்றைய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி சிவப்பு நிற லெதர் சூட்கேஸில் தாக்கல் செய்தார். 1958-ம் ஆண்டு நேரு பட்ஜெட் தாக்கல் செய்ய கறுப்பு நிற லெதர் சூட்கேஸ் பயன்படுத்தினார்.

இவ்வாறு தொடர்ந்து நிதி அமைச்சர்கள் சூட்கேஸ் நிறத்தை மாற்றினாலும், பட்ஜெட் தாக்கல் செய்ய லெதர் சூட்கேஸ் இல்லாமல் வந்ததே இல்லை.

மேலும் பார்க்க: பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...