• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சென்னை உட்பட 5 முக்கிய நகரங்களில் வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்களை எடுக்கும் பணி தொய்வு - காரணம் என்ன?

சென்னை உட்பட 5 முக்கிய நகரங்களில் வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்களை எடுக்கும் பணி தொய்வு - காரணம் என்ன?

கோப்பு படம்

கோப்பு படம்

பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நாட்டின் டாப் 5 மெட்ரோ நகரங்களில் வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்களை பணியமர்த்துவது குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பேரிடருக்கு மத்தியில் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகிய நாட்டின் டாப் 5 மெட்ரோ நகரங்களில் வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்களை பணியமர்த்துவது குறைந்துள்ளது. (அலுவலகம், வங்கிகள் மற்றும் ஏசி அறையில் அமர்ந்து உடையில் அழுக்கு படியாமல் வேலை பார்ப்பவர்கள் வொயிட் காலர் பணியாளர்கள் ஆவர்)

கொரோனா முதல் அலை ஏற்படுத்திய விளைவுகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவின் பல நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீப நாட்களாக நாடு முழுவதும் குறிப்பாக முக்கிய மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று வழக்குகள் காரணமாக, தற்போது மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற அச்சத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அச்சப்படுவதற்கு ஏற்றவாறு மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் 1 வாரம் முதல் 10 நாட்கள் வரை இடையில் லாக்டவுன் போடப்பட்டது.

தமிழகத்திலும் கூட சென்னை, கோவை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பகுதிநேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி மத்தியில் படிப்படியாக கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில், ஒரே மாதத்தில் கொரோனா முதல் அலைக்கு சமமாக மீண்டு பாதிப்புகள் அதிகரித்திருப்பது அனைவர் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மேற்கண்ட முக்கிய 5 பெருநகரங்களில் உள்ள பெருநிறுவனங்கள் வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்கள் எடுப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளன. பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் சென்னை ஆகியவை நகரங்கள் கடந்த 1 வருடத்தில் சுமார் 1 மில்லியன் ஆக்டிவ் வொயிட் காலர் வேலை வாய்ப்புகளை மொத்தமாக வெளியிட்டன. மேலும் ஆண்டுக்கான மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 40% பங்களிப்பை இவை அளித்தன. ஆனால் மார்ச் மாதத்தில் ஆக்டிவாக உள்ள வொயிட் காலர் வேலைகளின் வளர்ச்சியில் ஒரு தேக்கம் காணப்படுவதாக, லிங்க்ட்இன்னில் உள்ள நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வேலை பக்கங்கள் மற்றும் சில தரவுகளை மேற்கோள்காட்டி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... PPF முதல் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் வரை - தற்போது வழங்கப்படும் வட்டி என்ன?

ஆக்டிவ் வொயிட் காலர் வேலைவாய்ப்புகளில் பிப்ரவரியில் 11% உயர்வைக் கண்ட இந்த நகரங்கள், மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த செயலில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பங்களிப்பில் 1%-க்கும் மேலான வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது மோசமான அறிகுறி என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கு கொரோனா நோய் தொற்று எழுச்சி மற்றும் இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக இருப்பதாக கணிக்கப்பட்டுளள்து.

குறிப்பாக கடந்த 2 வாரங்களில் தான் ஆக்டிவ் வொயிட் காலர் வேலைவாய்ப்பில் திடீர் மந்தநிலை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தொற்றின் 2-வது அலை அச்சுறுத்தல், மீண்டும் லாக்டவுன் போட வாய்ப்பு , எதிர்பார்த்ததை விட மெதுவான தடுப்பூசி பிரச்சாரம், தடுப்பூசி செயல்திறன் பற்றிய விவாதங்கள் மற்றும் தடுப்பூசிக்கு பிந்தைய நோய் தொற்றுகள் பற்றிய அறிக்கைகள் உள்ளிட்ட காரணிகளின் கலவை இந்த மந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனங்கள் ஆட்களை பணியமர்த்துவது தொடர்பான திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புவதால், வொயிட் காலர் வேலைகளுக்கு ஆட்களை நியமிக்கும் விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் தொய்வு ஒரு தற்காலிகமானதாக இருக்கலாம் என்று தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: