தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ₹21,617 கோடியாக உயர்வு

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ₹21,617 கோடியாக உயர்வு
  • Share this:
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், அரசிற்கு 2021-21 ஆண்டில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 56 கோடி ரூபாய் வருவாய்  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 992 கோடி ரூபாய் செலவு இருக்கும் என்பதால், வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடியாக  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு பெற்ற கடன் தொகைக்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாயை அரசு வட்டியாக செலுத்துவதால், நிதி பற்றாக்குறை 59 ஆயிரத்து 346 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அரசுக்கு 1 லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடி வருவாய் இருக்கும் என்றும் ,  லட்சத்து 12 ஆயிரத்து 35 கோடி செலவு ஏற்படும் என்பதால் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 கோடியாகும், நிதி பற்றாகுறை 44 ஆயிரத்து 176 கோடி என்றும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த நிதியாண்டை விட வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்