நாட்டின் மிகபெரிய பண்டிகையான தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தங்களது வீடுகளுக்கு புது பொருட்களை வாங்குவதில் பெரும்பாலான மக்கள் தீவிரமாக இருக்கின்றனர். புது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன்கள் என எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை வாங்குவதற்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி ஷாப்பிங் நெருங்கியுள்ள நிலையில் உயர்ரக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரீமியம் பிரிவு ஸ்மார்ட் போன்களானஆப்பிள் ஐபோன் 11, 12, 13 சீரிஸ்கள், சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் மாடல்கள், டாப்-எண்ட் டிவி-க்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அவுட் ஆஃப் ஸ்டாக் அல்லது பற்றாக்குறையை சந்தித்துள்ளன. மேலே நாம் பார்த்த பொருட்களின் விநியோகமானது, பண்டிகை காலத்தையொட்டி தற்போது சந்தையில் தேவைப்படுவதை விட 15-30% குறைவாக உள்ளது.
ரீட்டெயில் செயின் நிறுவனமான Tata Chroma-வின் நிர்வாக இயக்குநர் அவிஜித் மித்ரா கூறுகையில், பொருட்களின் விநியோக நிலை பற்றி தற்போது கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 2 முதல் 15 வரையிலான நவராத்திரி பண்டிகை காலத்தில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் ரீடெய்ல் போன்ற ரீடெய்ல் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நடைபெற்ற அதிக விற்பனை தற்போது நெருக்கடியை சேர்ந்துள்ளன என்றார்.
இதனிடையே சில வாரங்களுக்கு முன் ஆன்லைன் மார்க்கெட்டில் நிலைமை சிறப்பாக இருந்ததற்கு காரணம் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்பே சரக்குகளை சேமித்து வைத்திருந்ததே. சமீபத்திய நிலவரப்படி, இரண்டாண்டுகளுக்கு முன்னர் வெளியான ஐபோன் 11-ஐ ஆப்பிளின் சொந்த ஆன்லைன் ஸ்டோர் டெலிவரி செய்யவே 3-4 வாரங்கள் ஆகும் என தெரிகிறது.
அதே போல சாம்சங் இந்தியா சமீபத்தில் தயாரிக்கப்பட்ட சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட் போன்களின் விநியோகத்திற்காக தென் கொரியாவில் உள்ள சாம்சங் தலைமையகத்திற்கு தொடர்ந்து தகவல் அனுப்பி வருகிறது. சீன நிறுவனமான சியோமி, அடுத்து சில நாட்களுக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்பட கூடும் என ஆன்லைன் மற்றும் ரீட்டெயில் முன்னணி விநியோகஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
Also read... பிளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்க இதுவே சரியான தருணம் - தீபாவளி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!
தேவைக்கும் சப்ளைக்கும் இடையே காணப்படும் இடைவெளியை கருத்தில் கொண்டு பல விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்பட தீவிரம் காட்டி வருவதாக சியோமி கூறியுள்ளது. ரூ.75,000 - ரூ. 1 லட்சம் வரை விலையுள்ள உயர்தர இறக்குமதி பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி-கள் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு முக்கியமானவையான சிப் செட்கள் மற்றும் செமி கன்டக்டர்கள் உள்ளிட்டவற்றில் காணப்பட்டு வரும் கடுமையான பற்றாக்குறையால், கடந்த சில வாரங்களாக சப்ளை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் Bosch மற்றும் Simens அப்ளையன்ஸ்களை விற்கும் BSH Household Appliances நிறுவனம் கூறுகையில், விநியோக சிக்கல்கள் காரணமாக மொத்த தேவையில் 15% பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் வேகமாக விற்பனையாகும், இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் ரேஞ்ச் தயாரிப்புகளும் கையிருப்பில் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.