Home /News /business /

வீட்டுக்கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது- எஸ்.பி.ஐ தலைவர் அறிக்கை!

வீட்டுக்கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது- எஸ்.பி.ஐ தலைவர் அறிக்கை!

ரஜ்னிஷ் குமார்

ரஜ்னிஷ் குமார்

பொதுத்துறை வங்கிகளை இணைத்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன.

  • News18
  • Last Updated :
வீட்டுக்கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுவதாக ஸ்டேட் பாரத வங்கி தலைவர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார நிலை குறித்து CNBC-TV18க்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார் ஸ்டேட் பாரத வங்கி தலைவர் ராஜ்னிஷ் குமார். அவர் கூறுகையில், “வீட்டுக்கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கி 18 சதவிகித வளர்ச்சியுடன் உள்ளது. வீடு விலை குறைந்துள்ளது. பட்ஜெட் ரக வீட்டுக்கடன்களுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது.

பொருளாதார மந்தநிலை குறித்த பார்வை மத்திய அரசுக்கு உள்ளது. விரைவில் நிலை சீர்செய்யப்படும். நமது பொருளாதாரத்தை கவனித்துப் பாருங்கள். புள்ளிவிவரங்களில் பெரிய மாற்றம் இல்லை. பல நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவின் நிலை மோசமில்லை. இந்தியா வளர்ச்சிக்கான துடிப்புடன் உள்ளது” என்றார்.

பொருளாதார நிலையை சீர்படுத்தவே பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைத்த நடவடிக்கைக்கு கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன.

மேலும் பார்க்க: நிதித்துறையில் கால்பதிக்கத் தயாராகும் ஜியோமி..!
Published by:Rahini M
First published:

Tags: SBI Bank

அடுத்த செய்தி