Home /News /business /

ஏமாற்றமா அல்லது நிராகரிப்பா.? இந்தியாவில் இளம்பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக விலகுகிறார்கள்!

ஏமாற்றமா அல்லது நிராகரிப்பா.? இந்தியாவில் இளம்பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக விலகுகிறார்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

India’s Unemployment Rate | கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேலான பெண்கள் இந்த காரணத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலையிலிருந்து நிரந்தரமாக நீங்கிவிட்டனர் என்று CMIE அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாக தான் பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன்பு ஒரு பெண் எவ்வளவு படித்திருந்தாலும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற தடை பல இடங்களில் இருந்தது. அந்த நிலை எல்லாம் மாறி இளம் வயதில் இருந்தே பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால்  சமீபமாக பல பெண்கள் வேலையை விட்டு நிரந்தரமாக நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளது! பெண்களுக்கு வேலையில் ஏற்படும் ஏமாற்றத்தால் விலகுகிறார்களா அல்லது பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்!

2017 ஆண்டு 2022 ஆண்டு வரை இந்தியாவின் வொர்க்ஃபோர்ஸ் எனப்படும் பணியில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 46 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 21 மில்லியன் பெண்கள் பணிக்குச் செல்வதில் இருந்து நிரந்தரமாக விலகிவிட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக இந்தியாவின் வேலைவாய்ப்பு கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மார்ச் 22 இல் 7.60 சதவீதமாக இந்தியாவின் வேலையில்லாத விகிதம், ஏப்ரல் மாதத்தில் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.



வேலை காலி இல்லை

இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனத்தில் முதுகலை படிப்பு படித்தவர்களுக்கு பெரும்பாலும் உடனடியாக வேலை கிடைத்துவிடும். ஆனால் பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வீழ்ச்சியும், வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும், பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு கூட சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஊரடங்கு ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து கடந்த ஆண்டு வரை கல்லூரி இறுதியாண்டு படித்தவர்கள் யாருக்குமே கேம்பஸ் டிரைவ் நடக்கவில்லை என்று கல்லூரி நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால் பலருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

Also Read : வேலைதேடும் இளைஞர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் நல்ல வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க

படித்து முடித்தவுடன் உடனடியாக வேலை கிடைக்கவில்லை என்ற வெறுப்புணர்வின் உச்சத்தில் இருக்கின்றனர். எனவே தங்களுடைய திறனைக் கூட சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு சூழல் இருக்கிறது. பணியிடங்கள் இருக்கும் எந்த வேலையும் பெரும்பாலானவர்களுக்கு பொருத்தமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தங்களை தாங்களே மிகவும் தாழ்வாக எடை போட்டுக் கொள்கிறார்கள்.

சமீப காலமாக வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது புதிய துறைகள் வந்துள்ளது, அதில் நீங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடாமல் வேறு துறைகளிலும் வேலையைத் தேடலாமே என்று கூறலாம். ஆனால் அதிலும் தற்போது வேலையை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் இருக்கிறது.வெவ்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் வந்தாலும் வெளிப்புறத்தில் காண்பது போல கணிசமான அளவு வேலைவாய்ப்புகள் உண்மையில் இல்லை.

Also Read : புதிய வேலைவாய்ப்பைத் தேடுவதில் ஆர்வமற்ற 50% இந்தியர்கள் - ஷாக் ரிப்போர்ட்

அதுமட்டுமின்றி படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் கூட பணியிடத்துக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. நேர்காணல்களில் கடினமாக இருக்கிறது. விண்ணப்பித்தவர்களை அவ்வளவு எளிதில் தேர்வு செய்வதில்லை.இதனால் பலருக்கும் வேலை கிடைப்பது கடினமாக இருக்கிறது. எதிர்பார்க்கும் சம்பளம் படிப்புக்கேற்ற வேலை ஆகிய இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாத ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற சூழலில் பலர் உள்ளனர். இதில் கணிசமான பெண்களும் அடங்குவார்.



இந்தியாவில் வேலைக்குச் செல்லும் 900 மில்லியன் நபர்களும் ஆக்டிவாக வேலை தேடவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.ஆனால் இது பணியிடத்தில் வேலை தேடுபவர்களுக்கு மட்டும் இல்லை, தங்களுடைய தனித்திறன்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கும் அதாவது அழகு நிலையம், ஜிம், பொருந்துகிறது. கொரோனாவிற்கு பிறகு பலரும் மீண்டும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது.

Also Read : ஏப்ரல் மாதத்தில் 38% உயர்வு கண்ட இந்திய வேலைவாய்ப்பு - ஏற்றம் கண்ட துறைகள் இதோ

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்த ஒரு பெண்ணிற்கு கொரோனா ஊரடங்கு காலம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் சம்பாதித்தது முழுவதும் இந்த இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ஆன்லைனில் சேவைகளை வழங்குவதற்கு முயற்சி செய்தாலும் அது வேலையில் இருப்பது போல சரியாக அமையவில்லை என்று வருத்தமாக கூறியிருந்தார்.

Also Read : 8 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்களா? உங்கள் ஆயுள் குறையலாம்!

கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேலான பெண்கள் இந்த காரணத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலையிலிருந்து நிரந்தரமாக நீங்கிவிட்டனர் என்று CMIE அறிக்கை தெரிவிக்கின்றது. ஏற்கனவே வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை இரண்டும் பார்த்து வரும் பெண்களுக்கு கொரோனா மிகப் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, குறைவான சம்பளம், குறைந்து வரும் வாய்ப்புகள் என்று பெண்கள் இந்தியாவின் வொர்க்ஃபோர்சில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: India, Unemployment, Women

அடுத்த செய்தி