Home /News /business /

கிரெடிட், டெபிட் கார்டுகளில் புள்ளிகள் மற்றும் வெட்டெழுத்துக்கள் ஏன் இருக்கின்றன என்பது தெரியுமா?

கிரெடிட், டெபிட் கார்டுகளில் புள்ளிகள் மற்றும் வெட்டெழுத்துக்கள் ஏன் இருக்கின்றன என்பது தெரியுமா?

ஹெல்த் கிரெடிட் கார்டு

ஹெல்த் கிரெடிட் கார்டு

நீங்கள் கை விரல்களை மேலாக வைத்து தடவி பார்த்தால், அந்த எழுத்துக்கள் அல்லது எண்களின் தொடுதல் உணர்வு உங்களுக்கு கிடைக்கும்.

டிஜிட்டல் உலகில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தாதவர் எவரும் இருக்க முடியாது. தொடக்க காலங்களில் வழங்கப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கும், இப்போது வழங்கப்பட்டு வரும் கார்டுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கார்டின் வண்ணம், டிசைன் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சிப் என ஏராளமான அம்சங்கள் இதில் நிறைந்துள்ளன. அனைத்து விதமான மாற்றங்களுமே, பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுபவை என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பு என்பது மட்டுமல்லாமல், நாம் நினைத்துக் கூட பார்க்காத சில காரணங்களுக்காகவும் சில வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. அந்த வசதிகள் என்ன, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தியின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு வரும் பெரும்பாலான கார்டுகளின் முகப்பு பக்கத்தில் சில புள்ளிகள் இடம்பெறுகின்றன. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு உரிமையாளரின் பெயர், அந்த கார்டுக்கான எண் ஆகியவை, வெட்டி ஒட்டி வைத்தாற்போல எழுதப்பட்டிருக்கும். அதாவது, நீங்கள் கை விரல்களை மேலாக வைத்து தடவி பார்த்தால், அந்த எழுத்துக்கள் அல்லது எண்களின் தொடுதல் உணர்வு உங்களுக்கு கிடைக்கும்.

ALSO READ |  அதிக வட்டி வழங்கும் அஞ்சல் நிலையத்தின் 3 சேமிப்புத் திட்டங்கள்!

ஆம், இந்த தொடுதல் உணர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான், அவை அப்படி பொறிக்கப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பாக வந்த கார்டுகளில் இதுபோன்ற எழுத்து வடிவங்கள் இல்லை. இதனால், கண் பார்வையற்றவர்கள் அல்லது ஓரளவு கண் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நாம் எந்த கார்டை பயன்படுத்த இருக்கிறோம் என்பது தெரியாமல் மிகுந்த சிரமங்களை அடைந்தனர். குறிப்பாக கார்டுகள் அனைத்தும் ஒரே சைஸ் உள்ளவை என்ற சூழலில், அவற்றை வேறுபடுத்தி பார்க்கும் வாய்ப்பு பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு கிடைக்கவில்லை.

பிரிட்டனில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பார்வை குறைபாடு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 3.4 லட்சம் பேர் முழுமையாக பார்வை குறைபாடு கொண்டவர்கள் அல்லது பாதியளவு பார்வை தெரியாதவர்கள் ஆவர். இதுபோலவே உலகெங்கிலும் கண்பார்வை திறன் இல்லாத மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த வசதிகளை வங்கிகள் அறிமுகம் செய்தன. முதன் முதலில் கடந்த 2015ஆம் ஆண்டில் நேட்வெஸ்ட் மற்றும் சிஸ்டர் பெயின் ஆர்பிஎஸ் ஆகிய வங்கிச் சேவைகள் தான் இந்த வசதியை அறிமுகம் செய்தன. இதேபோன்று டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றுக்கு வெவ்வேறு வடிவங்களை மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிமுகம் செய்தது.

ALSO READ |  மாதம் ரூ.3000 கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
 அடையாளங்கள் எதை குறிக்கின்றன : ஒரு கார்டில் இடம்பெற்றுள்ள புள்ளிகள் என்பது, அது டெபிட் கார்டா அல்லது கிரெடிட் கார்டா என்பதை வேறுபடுத்தி பார்க்க உதவுகிறது. இதேபோன்று தொடுதல் உணர்வு கிடைக்கும் வகையில், எழுத்துக்கள் அல்லது எண்கள் ஆகியவை வெட்டு வடிவத்தில் இருப்பதால், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அவற்றை அடையாளம் காணுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Credit Card

அடுத்த செய்தி