ஹோம் /நியூஸ் /வணிகம் /

பட்ஜெட் 2022: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது? விலை குறைகிறது? முழு விவரம்!!

பட்ஜெட் 2022: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது? விலை குறைகிறது? முழு விவரம்!!

மாதிரி படம்

மாதிரி படம்

Budget 2022 | ஹெட்போன்கள், இயர்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இதில் சில பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி மாற்றத்தால் பல்வேறு பொருட்களின் விலை குறைகிறது. அதேநேரத்தில், பல பொருட்களின் விலை உயரவும் உள்ளது.

அந்தவகையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட்டுக்கு பின்னர் ஹெட்போன்கள், இயர்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர உள்ளது. அதேநேரத்தில், பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய உள்ளது.

விலை உயர உள்ள பொருட்கள்:

குடைகள், ஹெட்போன்கள், இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் மீட்டர்கள், கவரிங் நகைகள், எக்ஸ்ரே எந்திரங்கள், எலக்ட்ரானிக் விளையாட்டு பொம்மைகள், சோலார் செல்கள் மற்றும் சோலார் மாட்யூல்கள் உள்ளிட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான பொருட்களுக்கான இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை உயர்த்தியதால் இந்த பொருட்களின் விலை அதிகமாகிறது.

விலை குறைய உள்ள பொருட்கள்:

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், ஃப்ரோசன் மஸ்ஸல்ஸ், ஃப்ரோசன் ஸ்குவிட்ஸ், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான ரசாயன பொருட்கள், ஸ்டீல் ஸ்கிராப்கள் மற்றும் அசிட்டிக் அமிலம் உள்ளிட்ட பொருட்களின் சுங்க வரியை குறைத்துள்ளதால் அவற்றின் விலை குறைய உள்ளது.

First published:

Tags: Union Budget 2022