வருடத்தின் கடைசி மாதம் டிசம்பர் என்றாலும் மார்ச் மாதம் என்பது ஒரு நிதியாண்டின் முடிவும், வருமான வரிக் கணக்கை ( Income Tax Return - ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியையும் கொண்டது. வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்து வரும் நேரத்தில், இப்போது அவர்கள் தங்களது ITR ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை (ITR return filing process) இ-வெரிஃபிகேஷன் ப்ராசஸ் (e-verification process) மூலம் முடிப்பது மிக முக்கியம். ஏனென்றால் ITR return filing process-ஐ முடிக்க மிகவும் அவசியமான காரணி, வெரிஃபிகேஷன் ப்ராசஸை முடிப்பதாகும். ஐடிஆர் தாக்கல் செய்யும் ப்ராசஸை முடிக்க, வரி செலுத்துபவர் தனது வருமான வரி ரிட்டர்ன்களை (Income Tax Returns) சரிபார்க்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் சரிபார்ப்பு இல்லாத ITR-ஆனது இன்வேலிடாக அதாவது செல்லாததாக கருதப்படும்.
வரி செலுத்துவோர் தங்களது ITR-V ஐ பெங்களூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அனுப்ப தேவை இல்லை. அதற்கு பதிலாக, மின்னணுச் சரிபார்ப்புக் குறியீட்டின் (EVC Electronic Verification Code) உதவியுடன் தங்கள் ரிட்டர்னை ஆன்லைனில் சரிபார்க்கலாம். இன்கம் டேக்ஸ் ரிட்டர்னை ஆன்லைன் மூலம் e-Verify செய்ய வெவ்வேறு வழிகள் உள்ளன.. அவற்றை கீழே பார்க்கலாம்..
* ஆதார் கார்டுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐ பெறுவது
* ப்ரீ-வேலிடேட்டட் பேங்க் அக்கவுண்ட் மூலம் EVC உருவாக்கப்படுவது
* ப்ரீ-வேலிடேட்டட் டிமேட் அக்கவுண்ட் மூலம் EVC உருவாக்கப்படுவது
* ஏடிஎம் மூலம் EVC (ஆஃப்லைன் மெத்தட்)
* நெட் பேங்கிங்
* டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிஃபிகேட் (DSC)
இதில் ஆதார் OTP-ஐ பயன்படுத்தி ITR-ஐ இ-வெரிஃபிகேஷன் செய்வதற்கான படிப்படியான செயல்முறைகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
* முதலில் https://www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரபூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்
* quick links என்ற tab-ன் கீழ் இருக்கும் e-Verify Return option என்பதை தேர்வு செய்யவும்.
Also Read : EFPO : முக்கிய அப்டேட்... மாச சம்பளக்காரர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும்!
* PAN, அசெஸ்மென்ட் இயர் (Assessment Year), ஒப்புகை எண் (Acknowledgement Number) மற்றும் மொபைல் எண் போன்ற அனைத்து விவரங்களையும் என்டர் செய்து continue என்பதை க்ளிக் செய்யவும்
* பின்னர் Generate Aadhaar OTP என்பதை நீங்கள் தேர்வு செய்த உடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஆதார் அடிப்படையிலான OTP அனுப்பப்படும்
* 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாக கூடிய OTP பெற்ற பின், அதை என்டர் செய்யவும்
Also Read : வாடிக்கையாளர்களுக்கு 6.7% வட்டி வழங்கும் அஞ்சல் நிலைய திட்டம்
* இப்போது உங்கள் ITR ஸ்டேட்டஸ் மற்றும் பரிவர்த்தனை ஐடி பற்றிய மெசேஜை பெறவும்
* வெரிஃபிகேஷன் ப்ராசஸ் தொடர்பாக மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி-க்கு உறுதிப்படுத்தல் மெசேஜ் மற்றும் மெயிலை யூஸர் பெறுவார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.