Home /News /business /

விலையேற்றம் - இன்று முதல் என்னவெல்லாம் மாறப் போகுது என தெரிந்து கொள்ளுங்கள்

விலையேற்றம் - இன்று முதல் என்னவெல்லாம் மாறப் போகுது என தெரிந்து கொள்ளுங்கள்

Price Hike

Price Hike

வலி நிவாரண மருந்துகள், ஆன்டி பயாடிக்ஸ், ஆன்டி இன்ஃபெக்டிவ்ஸ் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் உயருகிறது. பட்டியலிடப்பட்ட மருந்து பொருட்களின் விலையை 10 சதவீத அளவுக்கு உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
2021 - 2022 நிதியாண்டு முடிந்து, 2022 - 2023 நிதியாண்டு இன்று  முதல் தொடங்குகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் இன்று முதல் சில மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. குறிப்பாக, சொகுசு கார்களின் விலையேற்றம் முதல் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வரையில் நிகழ இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கிறது

வலி நிவாரண மருந்துகள், ஆன்டி பயாடிக்ஸ், ஆன்டி இன்ஃபெக்டிவ்ஸ் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று முதல் உயருகிறது. பட்டியலிடப்பட்ட மருந்து பொருட்களின் விலையை 10 சதவீத அளவுக்கு உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

குறிப்பாக, பெரிதும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், அஸித்ரோமைசின், சிப்ரோபிளாக்ஸின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் மெட்ரோனிடசோல் போன்ற மருந்துகளின் விலை உயருக்கிறது. இவை காய்ச்சல், நோய்த்தொற்று, சரும பதிப்புகள் மற்றும் இதய நோய்கள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும்.



மொத்தவிற்பனை விலை குறியீடு (WPI) அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் இந்தக் குறியீடு 10.76 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள 800 மருந்துகளின் விலை உயர்த்தப்படுகிறது.

Also Read : மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்

 

சொகுசு கார்களின் விலை உயருகிறது

சொகுசு கார் வாங்குபவர்கள், அதை மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக வாங்கியிருந்தால், கொஞ்சம் அதிர்ஷ்டசாலி தான். ஏனென்றால், உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், வால்வோ கார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் கார்கள் விலை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக, கார் உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கார் தயாரிப்புக்கு பயன்படும் அலுமினியம், பல்லாடியம், பிளாட்டினம், ரப்பர், காப்பர் போன்ற பொருட்களின் விலை 13 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

Also Read : PPF அக்கவுண்ட் தொடங்க இந்த விவரங்கள் ரொம்ப முக்கியம்!

கிரிப்டோ வரி விதிப்பு அமலுக்கு வருகிறது

விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகள் மீது 30 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று, மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் கரன்சி எனப்படும் கிரிப்டோ கரன்ஸிக்களுக்கு வரி விதிப்பதற்கு வழிவகை செய்யும் மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால், கிரிப்டோ கரன்ஸிக்களை விற்பனை செய்யலாமா அல்லது தொடர்ந்து வைத்திருக்கலாமா என முதலீட்டாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: India, Price hike

அடுத்த செய்தி