உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை பரிசளிக்கலாம்!

பொதுவாக தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நகை கடைக்கு சென்று ஆபரணங்களாகவோ, அல்லது நாணயமாகவோ வாங்குவர். இன்றைய காலகட்டத்தில் நகை வாங்க கடைகளுக்கு செல்லாமலேயே டிஜிட்டலில் அதனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை பரிசளிக்கலாம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 20, 2020, 7:47 PM IST
  • Share this:
தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இந்த காலத்தில், டிஜிட்டல் மூலம் எந்த ஒரு விஷயங்களையும் நாம் ஒரே இடத்தில் இருந்தபடி செய்து விடலாம். பணப்பரிவர்த்தனை முதல் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது மற்றும் விரும்பும் உணவுகளை ஆர்டர் செய்வது வரை டிஜிட்டல் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம். அதேபோல, நாம் அணியும் விலை உயர்ந்த ஆபரணமான தங்கத்தையும் நம்மால் இப்பொது வாங்க முடியும் என்பதுதான் டிஜிட்டல் உலகில் சாத்தியம். 

பொதுவாக தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நகை கடைக்கு சென்று ஆபரணங்களாகவோ, அல்லது நாணயமாகவோ வாங்குவர். இன்றைய காலகட்டத்தில் நகை வாங்க கடைகளுக்கு செல்லாமலேயே டிஜிட்டலில் அதனை ஆர்டர் செய்து கொள்ளலாம். டிஜிட்டல் தங்கத்தை வாங்க அல்லது முதலீடு செய்ய பல விருப்பங்கள் உள்ளன. அந்த வகையில், தங்கத்தை டிஜிட்டல் வடிவத்தில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சேஃப்கோல்ட்  தளம் தங்கக் குவிப்பு திட்டத்தை வழங்குகிறது. 

இந்த தளத்தின் மூலம் 24 கேரட்  தங்கத்தை வாங்கவும், விற்கவும் மற்றும் டெலிவரி எடுக்கவும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. இத்தளம் வருடத்தின் 365 நாட்களும் 24 மணிநேரமும் செயல்படும். அவ்வாறு டிஜிட்டல் தங்கத்தை வழங்க Paytm, PhonePe போன்ற பல ஆன்லைன் முதலீட்டு இணையதளங்கள் சேஃப்கோல்ட்  உடன் கூட்டு சேர்ந்துள்ளன.


இதுதவிர சேஃப்கோல்ட் மற்றொரு சுவாரஸ்யமான வசதியையும் வழங்குகிறது. அது என்னவென்றால்,  நீங்கள் விரும்பும் நபருக்கு கிப்ட் கார்டு மூலம் தங்கத்தை பரிசளிக்க தளம் உங்களை அனுமதிக்கிறது. அதுவும், செய்திகளை பரிமாறிக்கொள்ளும் தளமான வாட்ஸ்அப் மூலமாக உங்கள் அன்புக்குரியவர்களுக்கு தங்கத்தை பரிசளிக்கலாம் என்பதுதான் சிறப்பான விஷயம்.

Also read... வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? சமீபத்திய அப்டேட்டால் குழப்பம்வாட்ஸ்அப்பில் தங்கத்தை எவ்வாறு பரிசளிக்கலாம்?* சேஃப்கோல்ட்(safegold)  தளத்தில் உங்கள் கணக்கை  கொண்டு உள்நுழைய வேண்டும்.

* டாஷ்போர்டில் உள்ள பரிசு விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் தங்கத்தை நீங்கள் பரிசளிக்கலாம்.  

* குறிப்பாக அதில் நீங்கள் சேர்க்க விரும்பும் எந்தவொரு செய்தி அல்லது ஸ்டிக்கருடன், நீங்கள் பரிசு அளிக்க விரும்பும் நபரின் மொபைல் எண் மற்றும் தங்கத்தின் அளவை உள்ளிட வேண்டும்.

* அதன்பிறகு கிடைக்கும் ஒரு இணைப்பை வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் செய்தியிடல் தளம் மூலம் நீங்கள் அந்த நபருக்கு அனுப்பலாம்.

* அந்த இணைப்பு பெறுநரை பரிசு விருப்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

* இதெற்கெல்லாம் முன்னதாக ஒருவருக்கு பரிசளிக்க வேண்டுமானால் இந்த தளத்தில் நீங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு தங்கத்தை முதலில் வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* அதேபோல, தங்கத்தை நீங்கள் உங்களுக்கே பரிசாக வழங்கிக் கொள்ள முடியாது.

பரிசாக பெறுபவர் தங்கத்தை எவ்வாறு வாங்கலாம்

* தங்கத்தைப் பெறுபவருக்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தங்கத்தை வாங்கும் இணைப்புடன் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

* அந்த நபர் தனது பாதுகாப்பான கோல்ட் கணக்கில் உள்நுழைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசளிக்கப்பட்ட தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.

* சேஃப்கோல்ட் கணக்கு இல்லாத நபருக்கும் ஒரு இணைப்பு வழியாக தங்கத்தை பரிசாக அனுப்ப இந்த தளம் அனுமதிக்கிறது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட இணைப்பில் சென்று எந்த எண்ணிற்கு பரிசு வந்ததோ அந்த எண்ணை பரிசு பெற்றவர்கள் உள்ளிட்ட வேண்டும்.  

* அதன்பிறகு மொபைல் எண்ணிற்கு  OTP அனுப்பப்படும். அதனை உள்ளிடுவதன் மூலம் பரிசாக வழங்கப்பட்ட தங்கத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading