பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்-ஐ இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக, இந்த 2 ஆவணங்களையும் இணைப்பதற்கான கடைசி தேதி 2021-ஆம் ஆண்டு செப்டம்பருடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அந்தக் காலக்கெடுவை 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்தது.
உங்கள் 12 ஆகார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவும் நீங்கள் இதைச் செய்யலாம். நீங்கள் அனுப்பும் பான் எண், ஆதாருடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டால், “இந்த பான் நம்பருடன் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று செய்தி உங்களுக்கு வரும்.
அதே சமயம், இரண்டு ஆவணங்களிலும் உங்கள் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு உங்கள் ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவை
0000011112222 AAAPA7777Q என்றால், உங்கள் ஆவணங்களில் பெயர் மற்றும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருந்தால், மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, அந்த ஆவணங்கள் தாமாக இணைக்கப்பட்டு விடும்.
ALSO READ | EPFO | வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.5 சதவிதத்தில் இருந்து 8.1 சதவிதமாக குறைப்பு...
ஆன்லைனில் இணைப்பது எப்படி?
1. Income Tax e-filing வெப்சைட்டுக்கு நீங்கள் முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால், அங்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்
2.ஓடிபி வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பிறகு, பான் கார்டு விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்கவும். இப்போது நீங்கள் மீண்டும் லாகின் செய்ய வேண்டும்.
3.நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்திருந்தால், லாகின் என்பதை கிளிக் செய்யவும்
4.வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
5.இப்போது ஆதார்-ஐ இணைப்பதற்கான லிங்க், இந்தப் பக்கத்தின் அடிப்பகுதியில் இருக்கும். இங்கு நீங்கள் ஆப்சன் தேர்வு செய்யும்போது புதிய ஸ்கிரீன் ஒன்று திறக்கும்.
6.இப்போது உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
7.டிராப் டவுன் மெனு-வில் இருந்து ஆதார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
8.இப்போது உங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டுவிடும்.
ALSO READ | புதிய வாடிக்கையாளர்களை இனி இணைக்க கூடாது.. பேடிஎம்-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
ஒருவேளை கடைசி தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன், ஆதார் கார்டை நீங்கள் இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்து போகும். அது மட்டுமல்லாமல் நீங்கள் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அனைத்து வித சிக்கல்களையும் தவிர்க்க வேண்டுமென்றால் உடனடியாக பான் மற்றும் ஆதாரை இணைத்து விடவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.