முகப்பு /செய்தி /வணிகம் / வாரிசுதாரரை நியமிக்காவிட்டால் வங்கி டெபாஸிட் திரும்ப பெறுவதில் சிக்கல்!

வாரிசுதாரரை நியமிக்காவிட்டால் வங்கி டெபாஸிட் திரும்ப பெறுவதில் சிக்கல்!

bank deposit nominee

bank deposit nominee

Bank Deposit Nominee | கணவரின் அக்கவுண்டில் மனைவி பெயரும், மனைவி அக்கவுண்டில் கணவர் பெயரும் வாரிசுதாரராக இருந்தது. தாய் இறந்த ஓராண்டில் தந்தையும் இறந்துவிட்டார். இடைப்பட்ட காலத்தில் வாரிசுதாரரை புதுப்பிக்க பிள்ளைகள் மறந்து விட்டனர். இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சரி செய்ய இயலாமல் திணறி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வங்கிகளில் நாம் வைத்திருக்கும் அக்கவுண்ட் மற்றும் பிஎஃப் அக்கவுண்ட், அஞ்சல் நிலையங்களில் உள்ள சேமிப்பு அக்கவுண்ட் மற்றும் இதர நிதி சார்ந்த அனைத்து அக்கவுண்ட்களிலும் வாரிசுதாரரை நியமிப்பது அவசியமாகும். இதை நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில், ஒருவேளை நீங்கள் இறக்க நேரிடும்போது உங்கள் குடும்பத்தினர் உங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

என்ன மாதிரியான சிரமங்கள் ஏற்படும் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்வதில் பயனில்லை. யதார்த்த வாழ்வில் இந்த சிக்கல்களை எதிர்கொண்டவர்கள், நேரடி சாட்சியாக நம் கண் முன்னே இருக்கின்றனர். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிக்ஸட் டெபாசிட் திரும்பப் பெறுவதில் சிக்கல் :

குஜராத் மாநிலம், ஜாம்நகர் பகுதியில் முதியவர் ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூ.20 லட்சம் பிக்ஸட் டெபாசிட் செய்திருந்தார். அவர் அண்மையில் இறந்து விட்டார். ஆனால், அக்கவுண்டில் அவர் வாரிசுதாரரை நியமனம் செய்திருக்கவில்லை. இறந்த நபரின் மருமகள் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்த அந்தப் பெண் தற்போது 2 இளம் மகள்களுடன் வசித்து வருகிறார்.

இதுகுறித்து, அந்தப் பெண் கூறுகையில், “எனது மாமனார் இறப்புக்கு பிறகு நாங்கள் பெற்ற வாரிசு சான்றிதழில் நான் மற்றும் இரண்டு நார்த்தனார்கள் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் இருவரும் ஜாம் நகரில் வசிக்கவில்லை. அவர்களிடம் கையெழுத்து பெற நான் 5 மாதங்கள் அலைய வேண்டியிருந்தது. ஆனால், வங்கியில் இது மட்டும் போதாது என்று சொல்லி விட்டனர். குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இரண்டு வெளி நபர்கள், அவர்களுடைய வருவாய்க்கான ஸ்டேட்மென்ட் உடன் உத்தரவாதக் கடிதம் அளிக்க வேண்டும் என்றனர். அதுவும் என் மாமனார் செய்திருந்த டெபாஸிட் தொகையை விட கூடுதலாக இருக்க வேண்டுமாம்’’ என்று தெரிவித்தார்.

Also Read : தங்கம் அல்லது நிலம் வாங்கும் போது யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா.?

வாரிசுதாரரை புதுப்பிக்காவிட்டாலும் சிக்கல் :

லண்டனில் வசிப்பவர் எதிர்கொள்ளும் சிக்கல் இது. அவரது தாய், தந்தை ஆகிய இருவரும் பல கோடி மதிப்பிலான வங்கி டெபாஸிட் மற்றும் லாக்கர் போன்றவற்றை வைத்திருந்தனர். கணவரின் அக்கவுண்டில் மனைவி பெயரும், மனைவி அக்கவுண்டில் கணவர் பெயரும் வாரிசுதாரராக இருந்தது. தாய் இறந்த ஓராண்டில் தந்தையும் இறந்துவிட்டார். இடைப்பட்ட காலத்தில் வாரிசுதாரரை புதுப்பிக்க பிள்ளைகள் மறந்து விட்டனர். இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சரி செய்ய இயலாமல் திணறி வருகின்றனர்.

Also Read : குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் முழு விவரம் ..

வாரிசுச் சான்றிதழ் :

உங்கள் அக்கவுண்டில் நீங்கள் வாரிசுதாரரை நியமிக்கவில்லை என்றால், உங்கள் மறைவுக்குப் பிறகு வாரிசுச் சான்றிதழ் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை குடும்பத்தினர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும், அனைவரும் கையெழுத்து இடுவது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, மூன்றாம் நபர்களிடம் உத்தரவாதக் கடிதம் பெறுவது என ஏகப்பட்ட சிக்கல்களை உங்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ள நேரிடும். இதற்கு 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் கூட ஆகலாம்.

First published:

Tags: Bank accounts, Fixed Deposit