Home /News /business /

மக்களே உஷார்! பர்சனல் லோன் எனும் மாய வலையில் விழுந்துடாதீங்க! இந்த ஆலோசனையை கேளுங்க

மக்களே உஷார்! பர்சனல் லோன் எனும் மாய வலையில் விழுந்துடாதீங்க! இந்த ஆலோசனையை கேளுங்க

காட்சி படம்

காட்சி படம்

கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் இவ்வளவு டிஸ்கவுண்ட், அந்த வங்கி டெபிட் கார்டு பயன்படுத்தினால் அவ்வளவு டிஸ்கவுண்ட் என எதையாவது வாங்க வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

  ஆன்லைன் யுகத்தில் டி.வி, லேப்டாப், கம்யூட்டர் என எந்த ஸ்கிரீனை திறந்தாலும் சலுகை, தள்ளுபடி, கேஷ்பேக், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இந்த வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் இவ்வளவு டிஸ்கவுண்ட், அந்த வங்கி டெபிட் கார்டு பயன்படுத்தினால் அவ்வளவு டிஸ்கவுண்ட் என எதையாவது வாங்க வைக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

  நம்மில் பலரும் கண்ணைக் கவரும் கவர்ச்சி விளம்பரங்களையும், நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் லைஃப் ஸ்டைலை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையிலும் விலையுயர்ந்த கேஜெட்டுகள், கார்கள், சுற்றுலாக்கள் என கடனை வாங்கியாவது செலவு செய்கிறோம். இதுபோன்ற தேவையற்ற செலவுகளை ஊக்குவிப்பதற்கு கிரெடிட் கார்டு மட்டும் போதாது என்று, பல வங்கிகள் கவர்ச்சிகரமான இஎம்ஐ ஆப்ஷன்களுடன் கடன் திட்டங்களையும் வழங்குகின்றன.

  இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்குவதும், இஎம்ஐ கட்டுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. கல்வி, மருத்துவம், தொழில் தொடங்குவது, வீடு கட்டுவது போன்ற விஷயங்களுக்காக கடன் பெறலாம், ஆனால் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்பதற்காக அதிக வட்டியுள்ள பர்சனல் லோன்களை வாங்குவது மிகவும் ஆபத்தானது.

  பொதுவாக கார், கேஜெட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கான தனிநபர் கடன்களுக்கான (Personal Loan) வட்டி விகிதங்கள் மற்ற பாதுகாப்பான கடன்களை விட அதிகமாகும். இவற்றுக்கான வட்டி விகிதம் 10-24% வரை இருக்கும், இது வீட்டுக் கடன்களை விட அதிகம்.

  பர்சனல் லோன் வாங்குவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

  டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர், தொழில்முனைவோர், போட்காஸ்டர், முதலீட்டாளர் என பன்முக தன்மை கொண்ட ஷாமணி இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் ராஜ் ஷமானி, நிதி சம்பந்தமாக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவரை, இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேரும், ட்விட்டரில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேரும், யூ டியூப்பில் 2 லட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்டுள்ளார். வணிகம், பொருளாதாரம் தொடர்பாக பேசி வரும் இவர் கடன் வாங்குவது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

  Also Read : ஆண்டுக்கு வெறும் ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு

  உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த விலையுயர்ந்த கேஜெட்டுகள், கார்கள், பயணம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை வாங்க கடன் வாங்குவது என்பது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதற்கிடையில், உங்கள் வணிகத்திற்காக அல்லது அவசர தேவைகளுக்காக கடன் வாங்குவது, அதிக பணம் சம்பாதிக்கவும், மோசமான நிதி நிலையை வெல்லவும் உதவும் என்கிறார்.

  தனிப்பட்ட கடன்கள் மற்றும் அவற்றிலிருந்து விலகி இருப்பது ஏன் சிறந்தது என்பதைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை ஷமானி பகிர்ந்துள்ளார்.
  எப்போது கடன் வாங்க வேண்டும் என்பதை விட எதற்காக கடன் வாங்க வேண்டும் என்பது முக்கியம் என்கிறார். எனவே கடன்களை சொத்து வளர்ச்சிக்கான கடன், பொறுப்பு வளர்ச்சிக்கான கடன் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்.

  இதுகுறித்து ஷிமானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளதாவது “ ஒவ்வொரு முறையும் நீங்கள் வங்கியில் கடன் வாங்கும்போது, ​​‘நான் இந்தக் கடனை சொத்தாக உருவாக்குகிறேனா?’ என்று யோசியுங்கள். இதன் பொருள் எனது வணிகத்திற்கான கடன், புதிய சொத்தை விரிவுபடுத்துவது அல்லது எதிர்காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க இது எனக்கு உதவும். இதற்காக வாங்கும் கடன் உங்களை அதிகம் கவலைப்பட வைக்காது” என்கிறார்.

  இருப்பினும், ஒரு புதிய கேஜெட் அல்லது கார் வாங்குவது போன்ற விலையுயர்ந்த வாழ்க்கை முறையை பராமரிக்க கடன் என்றால், உங்களுடைய சுமையை அதிகரிக்க கூடிய பொறுப்பு கடனாகும். இதுபோன்ற கடன்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

  ஏனென்றால், தனிநபர் கடன் வாங்குவதில் பல ஆபத்துகள் உள்ளன.

  - சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் போவது.

  -நீங்கள் பணம் செலுத்துவதைத் தவிர்த்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

  - குறைந்த கிரெடிட் ஸ்கோருடன், எந்த வங்கியும் அல்லது நிதி நிறுவனமும் எதிர்காலத்தில் அவசரகால சூழ்நிலைகளில் கூட உங்களுக்கு எளிதாக கடன் வாங்க முடியாது.

  - அதிக கடன் தொகை உங்கள் மாத வருமானத்தை உறிஞ்சி, நிதி நிலையை மேலும் மோசமாக்கும்.

  எனவே பர்சனல் லோன் வாங்கச் செல்லும் முன்பு இதையெல்லாம் நன்றாக அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள், தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Loan

  அடுத்த செய்தி