இன்று முதல் நாடு முழுவதும் வரிகள் தொடங்கி, அபராத தொகை வரை பல மாற்றங்கள் வர உள்ளன.ஜூலை 1ம் தேதி முதல் புதிய ஊழியர்கள் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ஜூன் 30ம் தேதிக்கு முன் இந்த இணைப்பை மேற்கொண்டால் 500 ரூபாய் அபராதம். அதுவே ஜூலை 1ம் தேதிக்கு பின் மேற்கொண்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கடன் அட்டைகளுக்கான தொகை செலுத்தும் கால அவகாசம் முதல் மாதத்தில் 11-ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதி வரை கணக்கிடப்படும். வாடிக்கையாளர் கடன் அட்டைகளின் பரிவர்த்தனையை முடித்துக்கொள்ள கோரினால் 7 நாள்களுக்கும், அவரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும். எந்த முன் அனுமதியும் இன்றி, வங்கிகள் கட்டாயமாக யாருக்கும் கடன் அட்டைகளை அனுப்ப முடியாது.
கிரிப்டோ போன்ற டிஜிட்டல் பணத்திற்கும் இனி டிடிஎஸ் வரி விதிக்கப்படும். அதாவது க்ரிப்டோ வருமானத்திற்கு, க்ரிப்டோ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் டிடிஎஸ் பிடிக்கப்படும்.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பரிசு பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற நபர்கள் ஜூலை 1 முதல் அவற்றைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும்.
டிமேட் கணக்குகளுக்கு பெயர், விலாசம், பான்,தொலைப்பேசி எண், வருமான விவரம், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை பதிவு செய்ய கொடுக்கப்பட்ட அவகாசம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அந்த விவரங்களை அளிக்காதவர்களின் டிமெட் கணக்கு முடக்கப்படும்.
ஜூலை 1ம் தேதி முதல் புதிய ஊழியர்கள் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, ஒருவரின் மொத்த ஊதியத்தில் 50 சதவிதம் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும். அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது ஒருவரின் மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றால், அவரின் அடிப்படை சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கும் இந்த 15 ஆயிரத்திற்கு 12 சதவிதம் என்ற அளவில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால் 50 ஆயிரத்தில், அடிப்படை சம்பளம் என்பது 25 ஆயிரமாக மாறிவிடும். 25 ஆயிரம் ரூபாய்க்கு 12 சதவிதம் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இதனால் மாத சம்பளம் குறையும் . .
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.