நலிவடைந்த விவசாயிகளுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் நிதியாண்டில் 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 11-வது தவணையின் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களில் ரூ.2,000 நிதி பெறுவதற்கு, இந்த மாத இறுதிக்குள் (மே 31) PM Kisan Samman Nidhi-க்கான Kyc ப்ராசஸை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
PM Kisan Yojana-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ள தகவலின்படி அனைத்து பிஎம் கிசான் யூஸர்களும் முடிக்க வேண்டிய eKYC-க்கான காலக்கெடு 31 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
PMKISAN போர்ட்டலில், OTP அடிப்படையில் eKYC ப்ராசஸை முடிக்க முடியும். பயோமெட்ரிக் அடிப்படையில் eKYC முடிக்க விரும்பும் யூஸர்கள் அருகிலுள்ள CSC மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஜனவரி 1, 2022 அன்று, PM-Kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10-வது தவணை நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியது. 11-வது தவணை தேதி மே 31-ஆம் தேதி அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் வெளியிடப்படலாம்.
பிஎம் கிசான் யூஸர்கள் தங்களது eKYC ஐ ஆன்லைனில் எவ்வாறு அப்டேட் செய்வது?
* முதலில் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான
https://pmkisan.gov.in/NewHome3.aspx-க்கு செல்ல வேண்டும்
* ஹோம் பேஜின் வலது பக்கத்தில் உள்ள
eKYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
* பின் ஆதார் நம்பரை & கேப்ட்சா கோட் ஆகியவற்றை என்டர் செய்து search-ஐ கிளிக் செய்ய வேண்டும்
* தொடர்ந்து ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்
* மொபைல் நம்பரை என்டர் செய்த பிறகு, '
Get OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும்
* பின் குறிப்பிட்ட பாக்ஸில் மொபைல் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்
Also Read : pm kisan status : ரூ. 2000 எப்போது கிடைக்கும்? முக்கிய அறிவிப்பு!
பிஎம் கிசான் யூஸர்கள் தங்களது eKYC-ஐ CSC மையங்களில் அப்டேட் செய்வது எப்படி?
* பிஎம் கிசான் யூஸர்கள் அருகிலுள்ள CSC மையத்திற்கு சென்று, தங்களது PM Kisan அக்கவுண்ட்டிற்கான ஆதார் அப்டேட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
* லாகின் செய்ய அவர்களது பயோமெட்ரிக்ஸை என்டர் செய்ய வேண்டும்
* ஆதார் கார்ட் நம்பரை அப்டேட் செய்து ஃபார்மை சமர்ப்பிக்கவும்
* அவர்களது ஃபோனிற்கு உறுதிப்படுத்தலுக்கான SMS வந்தடையும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.