Home /News /business /

திருமண காப்பீடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

திருமண காப்பீடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Insurance

Insurance

Wedding Insurance | சில புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக 300 முதல் 2,000 விருந்தினர்கள் வருகையுடன் சராசரி இந்திய திருமணத்திற்கு 20 லட்சம் முதல் 5 கோடி வரை செலவாகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

  இன்றைய மனிதர்கள் தங்களின் பணத்தை பல தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர். நமது கலாச்சாரம், புராணம், பண்பாடு, உடை, உணவு போன்றவற்றின் மூலம், இவை இன்று நமக்கு கடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கம் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் இது போன்ற தேவையற்ற செலவுகளைப் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம். இது நம் திருமணங்களை நாம் கொண்டாடும் விதத்திலும் பிரதிபலிக்கிறது.

  சில புள்ளிவிவரங்களின்படி, சராசரியாக 300 முதல் 2,000 விருந்தினர்கள் வருகையுடன் சராசரி இந்திய திருமணத்திற்கு 20 லட்சம் முதல் 5 கோடி வரை செலவாகிறது என்று கண்டறிந்துள்ளனர். இது தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது அழுத்தம் ஏற்படுத்த கூடிய ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக கலாச்சார அமைப்பு காரணமாக மணமகள் வீட்டாரிடம் அதிக செலவுகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  திருமணத்தின் போது எதிர்பாராத செலவு நிகழும் வாய்ப்புகளுடன் இணைந்து தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான ஒட்டுமொத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், திருமணக் காப்பீடு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவும். ஏனெனில் இது பல பின்னடைவுகளின் விளைவாக ஏற்படக்கூடிய நிதி நெருக்கடியில் விடுவிக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

  கொரோனா தொற்றுநோய் காரணமாக 2021 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட பல திருமணங்கள் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இது உலகெங்கிலும், குறிப்பாக இந்திய சந்தையில் திருமணக் காப்பீட்டுக்கான தேவையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.  திருமணக் காப்பீடு என்பது பல மோசமான தருணங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். குறிப்பாக திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டாலோ, திருமண நகைகள் திருடப்பட்டு விட்டாலோ அல்லது தனிப்பட்ட விபத்து ஏற்பட்டாலோ இந்த திருமணக் காப்பீடு உங்களுக்கு உதவும்.

  Also Read : கார்ப்பரேட் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்க தாமதமானால் இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் மருத்துவ செலவை ஏற்குமா.?

  உதாரணமாக, உங்கள் திருமணத்தில் உணவளிப்பவர் உங்கள் திருமணத்திற்கு முன்பே வெளியேறினால், உங்கள் வைப்புத்தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம். கேட்டரிங், திருமண மண்டபம், டிராவல் ஏஜென்சிகள், ஹோட்டல் அறை முன்பதிவுகள், இசை ஏஜென்சி, அலங்காரம் போன்றவற்றுக்கு செலுத்தப்படும் அனைத்து முன்பணத்திற்கும் இந்த திருமண காப்பீடு பொருந்தும்.  பெரும்பாலான திருமணக் காப்பீட்டுகள் உங்களுக்கு இரண்டு வருடங்களுக்கான காப்பீட்டை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, திருமண தேதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காப்பீட்டைப் பெற வேண்டி இருக்கும். உங்கள் பணத்தை பாதுகாப்பான வகையில் வைத்திருப்பது எப்போதும் நல்ல விஷயம். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்பே, நீங்கள் திட்டமிட்ட அனைத்தையும் ஒரே நொடியில் அழிக்கக்கூடும்.

  Also Read : பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டத்தின் பிரீமியம் கட்டணம் உயர்வு.. வங்கி கணக்கில் ஆண்டுக்கு இனி கூடுதல் தொகை பிடித்தம்

  திருமணக் காப்பீட்டிற்கான முதன்மைக் காரணம், முழு நிகழ்வையும் ரத்து செய்தல் அல்லது ஒத்திவைத்தல் போன்ற நிச்சயமற்ற நிலைகளிலிருந்து பாதுகாப்பதாகும்.மேலும் நீங்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், திருமணத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் உங்கள் நிதி இழப்புகளை இந்த காப்பீடு ஈடுசெய்யும். இருப்பினும், காப்பீட்டுக் கொள்கையைப் பரிசீலிக்கும் முன், உங்கள் பாலிசியின் ஒவ்வொரு விவரத்தையும் புரிந்து கொள்ள உங்கள் காப்பீட்டு முகவருடன் பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் சரியான முடிவுகளை எடுக்கலாம்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Insurance, Wedding plans

  அடுத்த செய்தி