இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸை நிறுவியவர் நாராயண மூர்த்தி. 76 வயதான நாராயண மூர்த்தி இந்திய ஐடி துறையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். இவரது மனைவி சுதா மூர்த்தி முன்னணி சமூக செயல்பாட்டாளராக திகழ்ந்து வருகிறார். மேலும், இவரது மகள் அக்ஷதா மூர்த்தியை தான் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் திருமணம் செய்துள்ளார்.
பல தொழில் முனைவோருக்கு ஆதார்ஷமாக திகழும் நாராயண மூர்த்தி Moneycontrol தளத்திற்கு அளித்த பேட்டியில் தனது தினசரி வேலை முறை குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தை கட்டமைக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதை அவரது சாகக்கள் ஆச்சரியத்துடன் கூறுவார்கள். குறிப்பாக நாள்தோறும் காலை ஏழு மணிக்கெல்லாம் நாராயண மூர்த்தி தவறாமல் அலுவலகத்திற்கு வந்து விடுவார் என ஊழியர்கள் வியப்புடன் தெரிவிப்பார்கள்.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாராயண மூர்த்தி, நான் தினமும் 7 மணி அல்ல, 6.20 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு வந்து விடுவேன். இந்த வழக்கத்தை நான் ஓய்வு பெற்ற 2011ஆம் ஆண்டு வரை தவறாமல் கடைப்பிடித்தேன். உரிய நேரத்திற்கு அலுவலகம் வர வேண்டும் என்ற செய்தி இளைஞர்களின் மனதிற்கு எனது நடவடிக்கை மூலம் சென்று சேர்ந்தது. நாம் முன்னுதாரணமாக செயல்படுவதன் மூலம் தான் மிகச் சிறந்த நிறுவனத்தை உருவாக்க முடியும். நேரமும் தலைமை பண்பும் மிக முக்கியமானது.
காலை 6.20 மணிக்கு தொடங்கி, இரவு 8 அல்லது 9 மணி வரை தினசரி வேலை செய்ய வேண்டி இருக்கும். இதனால் எனது இரு குழந்தைகளுடன் என்னால் உரிய வகையில் நேரத்தில் செலவிட முடியவில்லை. 44 வருடங்கள் எனது மனைவி சுதா மூர்த்தி தான் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். தொழில் முனைவோராக வேண்டும் என்றால் தைரியமும் தியாகமும் அவசியம்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை பதவியையேற்று 20 ஆண்டுகள் நிறைவு
என் குழந்தைகள் பிஎச்டி முடித்ததும் சரி, அவர்களின் வளர்ச்சி அனைத்தும் சரி அதன் பெருமைகள் அனைத்தும் மனைவி சுதாவை தான் சாரும் என்றுள்ளார். 1981ஆம் ஆண்டில் நாராயண மூர்த்தி, தனது மனைவி சுதா மூர்த்தியிடம் ரூ.10,000 கடனாக வாங்கி இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 80 பில்லியன் டாலராக உள்ளது. சுமார் 3.35 லட்சம் ஊழியர்கள் இன்போசிஸ்சில் பணியாற்றுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.