Home /News /business /

கிரிப்டோ சொத்துகள் பற்றிய அனைத்தையும் இணையம் வழியாக தெரிந்துகொள்ள எங்கே படிக்கலாம்

கிரிப்டோ சொத்துகள் பற்றிய அனைத்தையும் இணையம் வழியாக தெரிந்துகொள்ள எங்கே படிக்கலாம்

ZebPay

ZebPay

Crypto Assets | கிரிப்டோ சொத்துகளில், கிரிப்டோ அசெட்டுகளுக்கான உலகின் மிகவும் குறிப்பிடப்பட்ட பிரைஸ்-ட்ராக்கிங் வலைத்தளமாக காயின்மார்க்கெட் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளது. அறிக்கையின்படி, அமெரிக்க அரசாங்கம் கூட காயின்மார்க்கெட்டின் தரவை ஆராய்ச்சி மற்றும் அறிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது. நம்பகத்தன்மை என்று வரும்போது, நீங்கள் இங்கே சரியான தகவலைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்

மேலும் படிக்கவும் ...
2021 ஆண்டானது NFTகள், மெட்டாவர்ஸ் மற்றும் பிளாக்செயின்களுக்கான ஆண்டாக இருந்ததால், இந்த ஆண்டு கிரிப்டோ சொத்துக்களைப் பற்றியதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. நீங்கள் கிரிப்டோ சொத்துக்களை முதன் முதலாகப் பயன்படுத்த தொடங்குகிறீர்கள் என்றால், பல தொழில்நுட்பத் தரவுகளைப் பிரித்தெடுப்பது உங்களுக்குக் கடினமானதாக இருக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்குவதற்கான தகவல்களின் அளவு அதிகம் என்பதால் அனுபவமுள்ள கிரிப்டோ முதலீட்டாளர்கள் கூட சில சமயங்களில் திணறிவிடுகின்றனர்.

இதை மனதில் வைத்து, கிரிப்டோ தொடர்பான அனைத்தைப் பற்றியும் இணையம் வழியாக  நீங்கள் கற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மற்றும் அதன் மூலம் முன்னேறுவதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இணையத்தில் உள்ள நம்பகமான ஆதாரங்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். இதோ அவை-

1 . ZebPay 

ZebPay இன் கற்றல் தொடர்பான சிறந்த அம்சம் என்னவென்றால், அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் கிரிப்டோவைப் பயன்படுத்துவதில் ஒரு ஆரம்ப நிலையாளர், இடைநிலையாளர் அல்லது அனுபவமிக்கவர் என யாராக இருந்தாலும், ZebPay இன் கற்றல் போர்ட்டலில் நீங்கள் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டறிவீர்கள். ஆரம்பநிலையாளர்களுக்கான அறிமுகத் தலைப்புகள் மற்றும் கிரிப்டோ கரண்சிகள் முதல் அனுபவமிக்க பயனாளர்களுக்கான விலைப் போக்குகள் மற்றும் சராசரி ரூபாய் விலை வரை, ZebPay இன் கற்றல் பிரிவில் அறிந்துக்கொள்வதற்காகக் கிடைக்கும் விஷயங்கள் ஏராளம்.

கிரிப்டோ சொத்துக்களைப் பற்றி கற்றுக்கொள்ளும்போது பயனர்கள் அதிகம் சந்திக்கும் கிரிப்டோ ஸ்லாங்கிற்காகவே அர்பணிக்கப்பட்ட ஒரு பகுதியும் மற்றும் கருத்துக்களை மேலும் எளிதாக விளக்குவதற்காகச் சிறந்த வீடியோக்களும் இந்தப் பிரிவில் உள்ளன. அது மட்டுமல்லாமல், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஹிந்தியில் விளக்கங்களுடன் கூடிய கிரிப்டோ கி பாத்ஷாலா என்ற வீடியோ பகுதியும் உள்ளது.

இறுதியாக, ZebPay மூலம் உங்கள் அறிவைத் திறம்பட பயன்படுத்தி, உங்கள் கிரிப்டோ சொத்துக்களுக்கான பயணத்தைத் தொடங்கலாம் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ZebPay உடன் உங்கள் கணக்கை இங்கே திறக்க மறக்காதீர்.

2 –.காயின்மார்க்கெட்கேப் 

கிரிப்டோ சொத்துகளில், கிரிப்டோ அசெட்டுகளுக்கான உலகின் மிகவும் குறிப்பிடப்பட்ட பிரைஸ்-ட்ராக்கிங் வலைத்தளமாக காயின்மார்க்கெட் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளது. அறிக்கையின்படி, அமெரிக்க அரசாங்கம் கூட காயின்மார்க்கெட்டின் தரவை ஆராய்ச்சி மற்றும் அறிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது. நம்பகத்தன்மை என்று வரும்போது, நீங்கள் இங்கே சரியான தகவலைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். காயின்மார்க்கெட்கேப்பின் வலைப்பதிவிற்கு அலெக்ஸாண்ட்ரியா என்று பெயரிடப்பட்டு, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட பெரும்பாலான புத்தகங்களை வைத்திருந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்க முயற்சிக்கப்படுகிறது. அதன் சொந்த இலக்கு என்னவென்றால், "முடிந்தால், உலகில் உள்ள கிரிப்டோ சொத்துக்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிப்பதுதான்.".

3 .காயின்ஜெக்கோ 

Coingecko ஐ முதன் முறையாகப் பார்க்கும்போது அதைப் புரிந்துகொள்வதற்குக் கடினமானதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதை எவ்வளவு அதிகமாக ஆராய்கிறீர்களோ, அந்த அளவிற்கு கிரிப்டோ சந்தையின் மதிப்பை நீங்கள் காண்பீர்கள். தொடக்கநிலையாளர்களுக்கான 10,000 க்கும் மேற்பட்ட கரன்சிகளின் விலைகளை நீங்கள் ட்ராக் செய்யலாம்! அதுமட்டுமின்றி, Coingecko அதன் வலைப்பதிவு, போட்காஸ்ட் மற்றும் NFTகள் முதல் DeFi, Bitcoin மற்றும் பல தலைப்புகளில் புத்தகங்களில் கிடைக்கும் ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ளது.

4 .எத்தீரியம் வலைப்பதிவு 

எத்தீரியம் என்பது நன்கு அறியப்பட்ட கிரிப்டோகரன்சிகளில் ஒன்றாக இருப்பதோடு, தற்போது NFTகளைச் சுற்றியுள்ள அதிகளவிலான மோகத்திற்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. மேலும் கிரிப்டோக்களை எதிர்காலத்திற்கு மிகவும் தொடர்புடையதாகவும் பொருத்தமானதாகவும் மாற்றுவதற்கு இது தன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. எத்தீரியத்தில் முதலீடு செய்வது பலனளிக்குமா என்பது உட்பட, எத்தீரியத்தைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துகொள்ளவும், அதன் இணை நிறுவனரான விட்டலிக் பியூட்டரின் அவர்களுடைய கருத்துக்களைக் கேட்கவும், எத்தீரியம் வலைப்பதிவைப் பின்தொடருங்கள்.

5 .கார்டனோ 

2022 ஆம் ஆண்டில் பெரிய அளவில் வளரக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஸ்டேக் பிளாக்செயின் இயங்குதளத்திற்கானச் சான்றுடன், கிரிப்டோ சொத்துக்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீண்ட கால பிரச்சனைகளைத் தீர்க்கும் தன் ஆராய்ச்சி சார்ந்த அணுகுமுறை குறித்து கார்டனோ பெருமை கொள்கிறது. Web3 மற்றும் பிளாக்செயினின் செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும், கார்டானோவின் வலைப்பதிவு மற்றும் ஃபோரம் பக்கங்களைப் பின்தொடர்வது கட்டாயமாகும். 

6 .சோலனா 

சோலனா மிகவும் பிரபலமான ஆல்ட்காயின்களில் ஒன்றாக இருப்பதோடு, தன்னை இன்னும் பெரிய உயரங்களுக்கு அளவிடுவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. இது மேற்கொண்டு முன்னேறிச் செல்ல நல்ல நிலையில் இருக்க உதவும் DeFi, NFTகள், Web3 மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 400 க்கும் மேற்பட்ட திட்டங்களுடன், 'உலகின் வேகமான பிளாக்செயின் மற்றும் கிரிப்டோவில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பாக' தன்னைத் தானே வரையறுத்துக் கொள்கிறது. இது தொடர்பான கருத்துகள் மற்றும் குறிப்பாக சோலனாவைப் பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால், அவர்களின் வலைப்பதிவைப் பார்வையிடுங்கள்.

7.புத்தகங்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் 

இறுதியாக, நீங்கள் கிரிப்டோகரன்சிகளைப் பற்றி புத்தகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள விரும்பினால், ஆண்ட்ரியாஸ் அன்டோனோபோலோஸின் தி இன்டர்நெட் ஆஃப் மணி மற்றும் மாஸ்டரிங் பிட்காயின் மற்றும் ஜாக் டாடர் மற்றும் கிறிஸ் பர்னிஸ்கேவின் கிரிப்டோஅசெட்ஸ் போன்ற புத்தகங்களைப் படிக்க மறக்காதீர்கள். கிரிப்டோக்கள் பற்றிய உங்கள் புரிதலை மேலும் வலுப்படுத்த, பேட்ரிக் ஓ' ஷாக்னெஸியின் இன்வெஸ்ட் லைக் தி பெஸ்ட் மற்றும் லாரா சின் என்பவரின் அன்செயின்டு போன்ற பாட்காஸ்ட்களின் உதவியுடன் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் உங்களை நம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படச் செய்யக்கூடிய முழுமையான ஆதார வழிகாட்டி உங்களுக்கு இப்போது கிடைத்துவிட்டது. நிச்சயமாகச் சொல்லப்போனால் இவை வெறும் ஆரம்ப நிலைகள்தான். மேலும், கிரிப்டோஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன், ZebPay கற்றலில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கற்றல் ஆதாரங்களுடன் அனைத்து சமீபத்திய தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

கிரிப்டோ சொத்துக்களைப் பற்றி அறிந்துகொள்வது 2022 ஆம் ஆண்டிற்கான உங்கள் தீர்மானங்களில் ஒன்றாக இருந்தால், அதை இப்போதே பாதுகாப்பாகத் தேர்வுசெய்யுங்கள்.

Promoted Content
Published by:Selvi M
First published:

Tags: Assets, Business, Crypto currency

அடுத்த செய்தி