ஹோம் /நியூஸ் /வணிகம் /

விவசாயிகள் கவனத்திற்கு... Rythu Barosa திட்டத்தின் கீழ் பேமெண்ட் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்க்கலாம்!

விவசாயிகள் கவனத்திற்கு... Rythu Barosa திட்டத்தின் கீழ் பேமெண்ட் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்க்கலாம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Rythu Bharosa status 2022 | நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மத்திய அரசின் சார்பில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடி கடந்த 2019 பிப்ரவரியில், சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி தொடக்கி வைத்தார். இந்நிலையில் ஆந்திர மாநில அரசும் அம்மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கென நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஆந்திர அரசு தற்போது YSR Rythu Barosa என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.13,500 நிதியை 3 தவணைகளில் அளிக்கும். இதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியுடன் (ரூ.6000) இணைந்து, ஆந்திர மாநில அரசு கூடுதலாக ரூ.7500 வழங்குகிறது.

இந்த YSR Rythu Barosa - PM Kisan திட்டத்தின் கீழ், ஆந்திர மாநில அரசு தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.13,500 நிதி உதவியை 3 வெவ்வேறு தவணைகளில் வழங்குகிறது. ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி ரூ.13,500 என்ற முழு தொகையில் PM KISAN திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உத்தரவாதம் அளிக்கப்படும் ரூ.6000 நிதியும் அடங்கும். அதாவது ஆந்திர அரசின் ரூ 7,500 நிதியும், மத்திய அரசின் ரூ.6,000 நிதியும் சேர்த்து ஆந்திர விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

இதற்கிடையே கடந்த மே16 அன்று ஆந்திர அரசு YSR Rythu Barosa - PM Kisan திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் அக்கவுண்ட்களில் ரூ.5,500 நிதியை டெப்பாசிட் செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல் தவணையான ரூ 5,500 நிதியை திங்களன்று வெளியிட்டார். மேலும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2000 நேரடியாக விவசாயிகளின் கணக்கில் மே மாத இறுதிக்குள் வரவு வைக்கப்படும். ஆக மொத்தம் ரூ.13,500-ல் ரூ.7500 நிதியானது ஆந்திர விவசாயிகளுக்கு இந்த மாதத்திலேயே கிடைக்கிறது.

Also Read : டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி அறிக்கை!

Rythu Bharosa - PM Kisan திட்டத்தின் கீழ் வரும் தகுதியான விவசாயிகள் தங்களது பேமெண்ட் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கு இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயியாக இருக்க வேண்டும்.

Also Read : மாதம் 1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுடைய 25 வயதில் இதை செய்யுங்கள்!

* முதலில் Rythu Bharosa-வின் அதிகாரப்பூர்வ போர்ட்டலான www.ysrrythubharosa.ap.gov.in -க்கு விசிட் செய்யவும்

* பின்னர் மேல் வலது மூலையில் உள்ள மெனு-பாரை கிளிக் செய்யவும்.

* பின் "Know your Status" ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* பின்னர் அதில் தெரியும் "Know your RythuBharosa Status" ஆப்ஷனை டேப் செய்யவும்.

* இப்போது தகுதியுள்ள விவசாயி அவரது "ஆதார் எண்ணை" உள்ளிட வேண்டும் மற்றும் "Submit” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* கடந்த தவணை மற்றும் வரவிருக்கும் தவணை பற்றிய விவரங்களை பார்க்க முடியும்.

Published by:Selvi M
First published:

Tags: Farmers, PM Kisan