ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரெடிட் கார்டு உங்களிடம் உள்ளதா.? யூபிஐ பேமெண்ட் செய்யும் வழிமுறை இதோ

கிரெடிட் கார்டு உங்களிடம் உள்ளதா.? யூபிஐ பேமெண்ட் செய்யும் வழிமுறை இதோ

கிரெடிட் கார்டு - யூபிஐ

கிரெடிட் கார்டு - யூபிஐ

UPI - Credit Card | ரூபே கிரெடிட் கார்டை, யூபிஐ உடன் இணைப்பதற்கு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. தற்போது இது விசா மற்றும் மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகளையும் அங்கீகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

டிஜிட்டல் பேமெண்ட் முறை பயன்பாட்டிற்கு வந்த பிறகு பண பரிவர்த்தனை செய்யும் ஏராளமான பயனாளர்கள் ஒரு கண்காணிப்புக் குடையின் கீழ் வந்துள்ளனர். குறிப்பாக, யூபிஐ பேமெண்ட் முறை இதற்கு உதவியாக இருக்கிறது. வங்கி அக்கவுண்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் அல்லது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய இயலுகிறது.

காய்கறி வியாபாரி முதல் ஷாப்பிங் மால் வரையிலும் எண்ணற்ற வியாபாரிகளுக்கு நொடிப் பொழுதில் பணம் செலுத்துவதற்கு இது உதவிகரமாக இருக்கிறது. தொடக்க காலத்தில், வங்கி அக்கவுண்ட்களை இணைத்தால் மட்டுமே யூபிஐ பேமெண்ட் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இதையடுத்து கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தியும் யூபிஐ பரிவர்த்தனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முதலில் உங்கள் கிரெடிட் கார்டை யூபிஐ ஆப் உடன் இணைக்க வேண்டும்.

பரிவர்த்தனை செய்யத் தொடங்குகிறபோது, கிரெடிட் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். ரூபே கிரெடிட் கார்டை, யூபிஐ உடன் இணைப்பதற்கு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. தற்போது இது விசா மற்றும் மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகளையும் அங்கீகரித்துள்ளது.

கிரெடிட் கார்டு மூலமாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கான வழிமுறைகள்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு

 • எஸ்பிஐ கார்டு அல்லது மொபைல் ஆப்-பின் பேனெட் சானலை பார்வையிடவும்.
 • உங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு நம்பரை குறிப்பிட்டு, செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிடவும். மற்றும் யூபிஐ ஆப்சனை தேர்வு செய்யவும்.
 • இதற்கடுத்து நீங்கள் யூபிஐ பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு ‘Enter your VPA’ அல்லது ‘Scan QR code’ என்பதை தேர்வு செய்யவும்.
 • யூபிஐ ஆப் பயன்படுத்தி க்யூர் கோடு ஸ்கேன் செய்யவும் மற்றும் விபிஏ எண் குறிப்பிடவும்.
 • பேமெண்ட் ஆப்சனை அங்கீகரிக்கவும்.
 • உறுதி செய்யப்பட்ட செய்தி தோன்றும்.
 • பேமெண்ட் செய்யப்பட்ட பிறகு, அது கிரெடிட் கார்டு அக்கவுண்டில் பதிவு செய்யப்படும்.
 • Also Read : வங்கிகள் உங்களை தேடி வந்து தரும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எப்படி இருக்கும்?

  ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு

  • பீம் ஆப் ஓப்பன் செய்யவும்.
  • 6 இலக்க பாஸ்வேர்டு எண்டர் செய்யவும்.
  • பணம் அனுப்புவதற்கான ஆப்சனை தேர்வு செய்யவும்.
  • இதற்கு அடுத்து, பணம் பெற இருப்பவரின் யூபிஐ ஐடி, அக்கவுண்ட் நம்பர், ஐஎஃப்சி கோடு போன்ற விவரங்களை குறிப்பிடவும்.
  • இப்போது மொபைல் எண் மற்றும் எம்எம்ஐடி போன்றவற்றை வழங்கவும்.
  • செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, 4 இலக்க யூபிஐ பின் நம்பரை எண்டர் செய்யவும்.
  • ஆக்சிஸ் கிரெடிட் கார்டு

   • யூபிஐ ஆப் மூலமாக பேமெண்ட் செய்யவும்.
   • ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பில் யூபிஐ ஐடியை குறிப்பிடவும்.
   • பெயரை உள்ளீடு செய்து, கிரெடிட் கார்டு பில் தொகையை குறிப்பிடவும்.
   • இறுதியாக யூபிஐ பின் நம்பர் பயன்படுத்தி பரிவர்த்தனையை நிறைவு செய்யவும்.
   • Also Read : குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள்..!

    பஞ்சாப் நேஷனல் வங்கி கிரெடிட் கார்டு

    • பேங்க் அக்கவுண்ட் இணைத்து, அதன் மூலம் விர்ச்சுவல் அட்ரஸ் மற்றும் பின் நம்பர் உருவாக்கவும்.
    • இப்போது பே பட்டன் கிளிக் செய்யவும்.
    • உங்கள் பேமெண்ட் விர்ச்சுவல் அட்ரஸ் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றால், யூபிஐ-யில் பதிவு செய்த பயனாளரின் விர்ச்சுவல் அட்ரஸ் குறிப்பிடவும்.
    • ஐஎஃப்எஸ்சி கோடு மூலமாக பரிவர்த்தனை செய்ய அக்கவுண்ட் விவரங்களை குறிப்பிட்டு பரிவர்த்தனையை மேற்கொள்ளவும்.
Published by:Selvi M
First published:

Tags: Credit Card, Tamil News, UPI