OnePlus TV U1S-க்கு கிடைக்கும் விழாக்கால தள்ளுபடி சலுகைகள்!ஒரு TV குறித்த நமது தேவைகள் மிகவும் பொதுவானவை. நாம் எதிர்பார்ப்பவை என்னவெனில், அற்புதமான இமேஜ் குவாலிட்டி, சிறந்த சவுண்ட் குவாலிட்டி, மற்றும் நமது வீட்டின் தோற்றத்திற்கு ஏற்ற நேர்த்தியான, அட்டகாசமான டிசைன். இதை சொல்வதற்கு எளிதுதான், இருப்பினும், மாறுபட்ட தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகள் ஒரு பயனருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அதைப் போக்கவே OnePlus U1S போன்ற TVகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
U1S பெரும்பாலான காட்சித் தேவைகளுக்குக் காரணமான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களின் சிறந்த வகைப்படுத்தலை வழங்குகிறது. இவை அனைத்தும் எளிமையான, அறிவார்ந்த OS மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதன் UI பயனரைக் குழப்பாமல் வேலையைச் செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, நீங்கள் 93% DCI-P3 கவரேஜைப் பெறுகிறீர்கள் (இது உங்கள் சராசரி கம்ப்யூட்டரை மானிட்டரை விட கிட்டத்தட்ட 50% பரந்த கலர் கேமட் கொண்டது), 4K குட்னஸின் 8.3 மில்லியன் பிக்சல்கள், HDR10, HDR10+ மற்றும் HLG க்கான ஆதரவு, எந்தவொரு ஆதாரத்திலிருந்தும் துடிப்பான இமேஜ்களை அனுமதிக்கிறது, மேலும் பல தனிப்பயனாக்கப்பட்ட அல்காரிதம்களை வழங்குகிறது மற்றும் AI அம்சங்கள் இமேஜ் குவாலிட்டியை மேம்படுத்தவும், கலர் மேப்பிங்கை அதிகரிக்கவும், மேலும் பலவற்றைச் செய்யவும் உதவும்.
இது ஏறக்குறைய பெஸல்-லெஸ் வடிவமைப்புடன் மெலிதானது, இருப்பினும், உறுதியானது. ஆடியோவைப் பொறுத்தவரை, 50" மற்றும் 55" மாடல்கள் 30W அவுட்புட் பவருடன் வருகின்றன. இந்த ஸ்பீக்கர்கள் Dynaudio உடன் உதவியுடன் டியூன் செய்யப்படுகின்றன, மேலும் அவை ஆழமான சவுண்டிற்காக Dolby Atmos ஐ ஆதரிக்கின்றன.
ஸ்மார்ட் வால்யூம் கன்ட்ரோல், போனிலிருந்து செய்தியை டிரான்ஸ்ஃபர் செய்யும் டைப்சிங்க், கிட்ஸ் மோடுகள் போன்ற இன்னும் பல ஸ்மார்ட் அம்சங்கள் கிடைக்கின்றன. OnePlus Buds மற்றும் Watch உள்ளிட்ட OnePlus சாதனங்களுக்கான தடையற்ற ஆதரவும் கிடைக்கிறது. வாய்ஸ் கன்ட்ரோலும் உள்ளது.
இந்த U1S ஒரு சிறந்த பேக்கேஜ் உடன் வருகிறது, மற்றும் இதன் விலையைப் பார்த்தால் 50” மாடலுக்கு 50K க்கும் குறைவான விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த விழாக்காலத்தில், நீங்கள் ஒரு TV ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், இதை வாங்குவதன் மூலம் நீங்கள் அதிகப்படியான சேமிக்கலாம்.
முதன்முதலாக வாங்குபவர்களுக்கு, நவம்பர் 8 ஆம் தேதி வரை ரூ. 3,000 முழுத் தள்ளுபடி கிடைக்கிறது (ஆன்லைனில் மற்றும் பல்வேறு ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில்). மேலும் OnePlus.in, செயலிகள், எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள். Amazon மற்றும் Flipkart, Reliance Digital, Poorvika Mobiles, Sangeetha Mobiles, மற்றும் பிற பங்குதாரர் கடைகளில் வங்கி தள்ளுபடி ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை கிடைக்கிறது.
OnePlus இன் ஆன்லைன் தளங்கள் மற்றும் பிரபலமான இ-காமர்ஸ் தளங்களின் மூலம் ஆன்லைனில் வாங்கும்போது 9 மாதத்திற்கு கட்டணமில்லா EMI விருப்பத்தேர்வும் கிடைக்கிறது. OnePlus எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களில் ஆஃப்லைனில் வாங்குவதற்கு Baja Paper Finance இதே போன்ற விருப்பத்தேர்வை வழங்குகிறது.
OnePlus.in அல்லது செயலியில் நீங்கள் இதை வாங்கினால், Bajaj Easy Finance மூலம் 6 மாத கட்டணமில்லா EMI விருப்பத்தேர்வும் மற்றும் AMEX பயனர்களுக்கு 10% கேஷ்பேக்கும் கிடைக்கும்.
இது போன்ற சிறந்த சலுகைகளுடன், இந்த விழாக்காலத்தில் U1S ஸ்மார்ட் TV ஐ வாங்க தவறாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: One plus, Smart tv, Technology