• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • இந்தியாவின் டிஜிட்டல் பிளவுகளை இணைப்பது நம் கையில்தான் உள்ளது – எவ்வாறு என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

இந்தியாவின் டிஜிட்டல் பிளவுகளை இணைப்பது நம் கையில்தான் உள்ளது – எவ்வாறு என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

கல்வி அமைச்சக அறிக்கையின்படி, அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஏழு பெரிய மாநிலங்களில் 40% முதல் 70% வரையிலான பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகல் கிடைக்கவில்லை.

 • Share this:
  கோவிட் -19 தாக்கத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான குழந்தைகள் திடீரென தொலைந்தபோன பள்ளி ஆண்டுகளை வெறித்துப் பார்த்தனர், ஏனெனில், தொற்றுநோய்கள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் அவசியமான, இணையத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அவர்களிடம் இல்லை. இப்போதும் கூட, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் பெரிய அளவில் தொடங்கப்படாத நிலையில், இந்த புதிய கற்றல் முறை இயல்பானதாகிவிட்டது. கல்வி அமைச்சக அறிக்கையின்படி, அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஏழு பெரிய மாநிலங்களில் 40% முதல் 70% வரையிலான பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகல் கிடைக்கவில்லை.

  மறுபுறம், தொழில்புரிபவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை, இது பணி நிமித்தமான வீடியோ சந்திப்புகளுக்கும், இரவில் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் அவர்களுக்கு உதவியது. இதற்கிடையில் காணாமல் போன எண்ணிலடங்கா செகண்ட்-ஹேண்ட் மொபைல் போன்கள், சமுதாயத்தில் உள்ள பின்தங்கிய குழந்தைகளுக்குத் தங்கள் கல்வியைத் தொடர உதவியிருந்திருக்கலாம்.

  இது பெருந்தொற்றால் அதிகரிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் பிளவு, நாம் அனைவரும் ஒருங்கிணைந்துதான் இதற்கு தீர்வு காண வேண்டும். கல்வி முதல், ஆரோக்கியம் மற்றும் நிதிக்கான அணுகல் வரை, வருமானத்தில் பின்தங்கிய சமூகங்களுக்கு அனைத்துமே தடைகளாக அமைகின்றன. பின்தங்கிய சமூகங்களைச் சார்ந்த இந்த மாணவர்களின் சிறிது கால இடைநிற்றல் குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தைத் திருமண பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

  இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட, Amazon இந்தியாவின் டெலிவரிங் ஸ்மைல்ஸ் முன்முயற்சி, நாட்டில் அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் பிளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெலிவரிங் ஸ்மைல்ஸ் முன்முயற்சியின் மூலம், Amazon இந்தியா, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே டிஜிட்டல் சாதனங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்குவதோடு, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் இலக்குகளுக்கும் பங்களிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள 100,000 மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், 150 க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து, Amazon 20,000 டிஜிட்டல் சாதனங்களை வசதியற்ற இளைஞர்களுக்கு நேரடியாக வழங்கும். கூடுதலாக, மில்லியன் கணக்கான Amazon வாடிக்கையாளர்கள் Amazon Pay மூலம் நன்கொடை வழங்கலாம் அல்லது இளைஞர்களுக்கு டிஜிட்டல் கற்றல் சாதனங்களை வழங்குவதற்காக புதுப்பிக்கப்பட்டு விநியோகிக்கப்படக்கூடிய தங்கள் பழைய மொபைல் போன்களை வழங்கலாம்.

  வெற்றிக் கதைகள்:

  டெலிவரிங் ஸ்மைல்ஸ் முன்முயற்சியால் பயனடைந்த மாணவர்களின் கதைகளில் சில: 9 ஆம் வகுப்பில் படிக்கும் பெங்களூரைச் சேர்ந்த 15 வயது அனிதா P, தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக, பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோதும், கட்டுமானத் தளங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவள் தனது படிப்பைத் தொடர டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் வாங்க முடியாததால், பள்ளிப் படிப்பில் இருந்து திடீரென விலகினாள். Amazon வழங்கிய டேப்லெட்டைப் பெற்றதிலிருந்து, அவளது கற்றல் மேம்படுத்தப்பட்டு, அவளது மதிப்பெண்கள் சீராக அதிகரித்தன.  ஹரியானாவைச் சேர்ந்த 12 வயதான ஹிமான்ஷு தொடர்ந்து படிக்க விரும்பினான், ஆனால், பெருந்தொற்றின்போது செய்தித்தாள் விற்பனையாளராக வேலை செய்த அவரது தந்தை வேலை இழந்தார், ​​எனவே, பொறியியலாளராக வேண்டும் என்ற அவனது கனவு விரைவில் மங்கத் தொடங்கியது. Amazon இன் உள்ளூர் NGO கூட்டாளர்களால் அவன் அடையாளம் காணப்பட்டு டேப்லெட்டைப் பெற்ற பிறகுதான், அவனது கனவை நனவாக்க அவனது ஆசிரியர் உதவியுடன் அவன் கல்வியைத் தொடர முடிந்தது.  ஹரித்வாரைச் சேர்ந்த 11 வயதான தருண் குமார், Amazon வழங்கிய டேப்லெட்டின் மற்றொரு பயனாளி. இதற்குமுன் இவன் தனது படிப்பதைத் தொடர்வதற்காக, தனது நண்பருடன் ஸ்மார்ட்போனைப் பகிர்ந்து கொள்ள நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அவனது தந்தை ஒரு தினக்கூலி என்பதால், அவரால் டேப்லெட் வாங்கித் தர இயலவில்லை. ஆனால், இன்று அவனும் அவன் சகோதரியும் இந்த முன்முயற்சியால் வழங்கப்பட்ட டேப்லெட் மூலம் பயனடைந்து தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.

  பெருந்தொற்று காரணமாக வழக்கமான கற்றல் முறை மாற்றப்பட்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில், இந்தச் சிறிய சாதனத்திற்கான பாதுகாப்பான அணுகல் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பதற்கானச் சில எடுத்துக்காட்டுகள் இவை. மேலும் இது நமது செகண்ட்-ஹேண்ட் மொபைல் போன்களை சிறந்த முறையில் பயன்படுத்தி நாம் பெருமைகொள்ள வழிவகுக்கிறது மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தரவும், இழந்த புன்னகையை மீண்டும் கொண்டுவரவும், நாட்டின் டிஜிட்டல் பிளவைக் குறைக்க உதவவும் வலியுறுத்துகிறது.  எனவே உங்கள் பழைய போனை கொடுத்தோ அல்லது நிதியை நன்கொடையாக வழங்கியோ, பின்தங்கிய சமூகங்களைச் சார்ந்த குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் பங்கை அளிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Selvi M
  First published: